NEET தேர்வில் கணக்கு பார்முலா..! அண்ணாமலை உளறல் VIDEO
NEET தேர்வில் உள்ள ஒரு பார்முலாவை உதயநிதிக்கு சால்வ் பண்ண தெரியுமா என்று பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை டுவிட்டரில் பலரும் ரவுண்டு கட்டி விமர்சித்துள்ளனர்.
மதுரை விமான நிலையத்தில் அண்ணாமலை செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அதில் அவர் கூறியது: உதயநிதியை ஒரு பொருட்டாகவே எடுத்து கொள்ளாதீர்கள்? அவரது திறமைக்கு மக்கள் ஓட்டு போட்டார்களா?
உதயநிதிக்கு நீட் தேர்வில் ஒரு பார்முலா solve பண்ண தெரியுமா? ட்ரிக்னாமென்ட்ரி தெரியுமா? ஜாமெண்ட்ரி பத்தி தெரியுமா? இவர் எல்லாம் அண்ணா பல்கலைக்கழகத்தின் செனட் மெம்பர், கஷ்ட காலம் என்று பேசி இருக்கிறார்.
அண்ணாமலையின் பேச்சை ட்விட்டரில் அனைவரும் கெட்டியாக பிடித்துக் கொண்டார்கள். NEETல் எது கணக்கு பாடம்? என்று போட்டு துவம்சம் செய்துள்ளனர். இந்த சிலர் அந்த டுவிட்டரை Retweet செய்து பங்கம் செய்து வருகின்றனர். அந்த வீடியோ கீழே தரப்பட்டு உள்ளது. நீங்கள் காணலாம்: