ரூ.68 கோடி கொடுத்தாச்சு..! ஜெ. வீடு அரசுடைமையாச்சு..! என்ன நடந்தது?
சென்னை: இழப்பீட்டு தொகை ரூ.67.90 கோடி வழங்கியதால் ஜெயலலிதாவின் வீடு அரசுடைமையானது.
சென்னை போயஸ் கார்டன் பகுதியில் ஜெயலலித வசித்த வீடு வேதா இல்லம். அதை நினைவு இல்லமாக மாற்ற தமிழக அரசு முடிவு செய்தது. வீட்டின் மொத்த மதிப்பு ரூ. 67.90 கோடி என தீர்மானிப்பட்டது.
ஜெ. வாரிசுகளான தீபா, தீபக் இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், வீட்டை கையகப்படுத்த, அதற்கான இழப்பீட்டு தொகை 67.90 கோடியை, நீதிமன்றத்தில் அரசு செலுத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. இதையடுத்து ரூ. 68 கோடியை தமிழக அரசு செலுத்தியது.
இதனை தொடர்ந்து தமிழக அரசு வெளியிட்ட அறிக்கை: ஜெயலலிதா வசித்த வேதா நிலையம் அரசுடைமையாக்கப்பட்டது. இழப்பீட்டு தொகையை சம்பந்தப்பட்டவர்கள், சிட்டி சிவில் நீதிமன்றத்தின் மூலம் பெற்று கொள்ளலாம். நினைவு இல்லத்தில் ஒரு பகுதியை முதல்வர் முகாம் அலுவலகமாக பயன்படுத்தலாம் என்ற நீதிமன்ற உத்தரவு நடைமுறைக்கு சாத்தியமில்லை. நினைவு இல்ல முகாம் அலுவலகம் அமைக்கப்பட மாட்டாது என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.