திமுகவுக்கு ஓட்டு போடாதவங்க வருத்தப்படுவாங்க…! முதலமைச்சர் ஸ்டாலின் பன்ச்…!
டெல்லி: திமுகவுக்கு ஓட்டு போடாதவர்கள் வருத்தப்படும் அளவுக்கு எங்களின் ஆட்சி இருக்கும் என்று தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.
டெல்லி சென்றிருக்கும் முதலமைச்சர் ஸ்டாலின் இன்று மாலை 5 மணிக்கு முதலமைச்சரான பின்னர் முதல் முறையாக பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். அப்போது தமிழக நலன்களுக்காக கோரிக்கை மனு ஒன்றை அளித்தார்.
பின்னர் பிரதமர் மோடியுடனான சந்திப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது செய்தியாளர்கள் பலரும் பல்வேறு கேள்விகளை கேட்டனர். முக்கியமாக டாஸ்மாக் கடைகள் மூடப்படுவது குறித்து செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த முதலமைச்சர் ஸ்டாலின், தமிழகத்தில் நிச்சயமாக டாஸ்மாக் கடைகள் எண்ணிக்கை குறைக்கப்படும். எப்படி படிப்படியாக குறைக்கப்படும் என்ற கேள்வி எழுப்பப்பட்ட போது அதற்கு ஸ்டாலின் பதிலளிக்கவில்லை.
திமுக ஆட்சி பதவியேற்று 42 நாட்கள் ஆகிவிட்டது, எப்படி செயல்பட்டு கொண்டு இருக்கிறீர்கள் என்று வேறு ஒரு செய்தியாளர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் கூறிய ஸ்டாலின், எங்களுக்கு வாக்களிக்கத்தவர்கள் மகிழ்ச்சி அடைய வேண்டும்.
வாக்களிக்காதவர்கள் திமுகவுக்கு ஓட்டு போடாமல் விட்டுவிட்டோமே என்று வருத்தப்பட வேண்டும். அப்படிப்பட்டதாக திமுகவின் ஆட்சி தமிழகத்தில் இருக்கும் என்று ஸ்டாலின் கூறினார்.