இவர்கள் தான் பிக்பாஸ் 5 சீசன் போட்டியாளர்களா…? லீக்கான லிஸ்ட்
சென்னை: பிக்பாஸ் 5 சீசன் போட்டியாளர்கள் என்று ஒரு பட்டியல் இணையத்தில் பரபரப்பாக ஓடி கொண்டிருக்கிறது.
தனியார் தொலைக்காட்சி ஒன்றில் எப்போதும் பிரம்மாண்டமாக நடத்தப்படும் நிகழ்ச்சி பிக் பாஸ். அதிக பார்வையாளர்களை கொண்டு உள்ள இந்த நிகழ்ச்சிக்கு எப்போதுமே மவுசு உண்டு. அதனால் தான் இப்போது 5வது சீசன் வந்திருக்கிறது.
4 சீசன்களும் செம ரெஸ்பான்ஸ் கொடுத்துள்ளதால் 5வது சீசன் மாஸாக கொடுக்க தனியார் தொலைக்காட்சி நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அநேகமாக செப்டம்பர் மாதம் முதல் ஒளிபரப்பலாம் என்று முடிவு எடுக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த சீசன்களை போலவே இந்த முறையும் கமல் தான் தொகுத்து வழங்க இருப்பதாக கூறப்படுகிறது. அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெகு விரைவில் வெளியிடப்படும். ஒளிப்பரப்புக்கு குறுகிய காலமே இருப்பதால் தயாரிப்பு பணிகள் படு விறுவிறுப்பாக போய் கொண்டு இருக்கிறது.
இந்த சீசனில் புதுப்புது டாஸ்குகள் டிசைன் செய்யப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. அனைத்தும் ரசிகர்களுக்கு தனி உலகத்தை அழைத்து செல்லும் வண்ணம் இருக்குமாம். பங்கேற்பாளர்கள் அனைவரும் கட்டாயம் கொரோனா தடுப்பூசி 2 டோசும் போட்டியிருக்க வேண்டும் என்பது தயாரிப்பு நிர்வாகத்தின் கட்டளை.
சரி… இந்த 5வது சீசனில் யார், யார் கலந்து கொள்ள உள்ளனர் என்று எல்லோரும் எதிர்பார்த்து கொண்டிருக்க, ஒரு லிஸ்ட் தயாராகி இணையத்தில் உலாவிக் கொண்டு இருக்கிறது. இந்த போட்டோக்களை ரசிகர்கள் யாராக இருக்கும்? அவரா? இவரா? என்று படு குழப்பத்தில் உள்ளனர்.
ஒளிபரப்புக்கு இன்னும் நாட்கள் இருக்கும் நிலையில் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. அதே நேரத்தில் இந்த முறை சினிமா பிரபலங்கள் பலரும் சீசன் 5ல் போட்டியாளர்களாக பங்கேற்க உள்ளனராம். டாஸ்க்கும் புதுசு, ஆளும் புதுசு என்பதால் எப்போது அறிவிப்பு என்று இப்போது ரசிகர்கள் எதிர்பார்க்க ஆரம்பித்துவிட்டனர்.