பிளஸ் 1 வகுப்பில் சேர நுழைவுத் தேர்வு…! தமிழக அரசு முக்கிய அறிவிப்பு
சென்னை: பிளஸ் 1 வகுப்புக்கு மாணவர்களை சேர்ப்பது குறித்து முக்கிய அறிவிப்பு ஒன்றை பள்ளிக்கல்வி துறை வெளியிட்டு உள்ளது.
கொரோனா பரவல் எதிரொலியாக தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டது. 10ம் வகுப்பு ரததானதால் காலாண்டு, அரையாண்டு தேர்வு மதிப்பெண்களில் 80 சதவீதமும், வருகை பதிவில் 20 சதவீதமும் என்ற அடிப்படையில் மதிப்பெண் கணக்கிடப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இந் நிலையில் 11ம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கான வழிகாட்டல் நெறிமுறைகள் வெளியிடப்பட்டு உள்ளன. பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டு உள்ள இந்த அறிவிப்பில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்டு உள்ள இடங்களை விட கூடுதலாக 15 சதவீதம் வரை மாணவர் சேர்க்கை நடத்துமாறு கூறப்பட்டு உள்ளது.
ஒரு குறிப்பிட்ட பாடப்பிரிவுக்கு அதிகம் பேர் விண்ணப்பித்து இருந்தால், நுழைவுத் தேர்வு நடத்தப்படும். அதாவது, எந்த பிரிவுக்கு விண்ணப்பிக்கிறார்களோ அந்த பிரிவுடன் தொடர்புடைய பாடங்களில் 50 கேள்விகள் கேட்கப்படும்.
மேலும் கீழ்நிலை வகுப்பு பாடங்களில் இருந்து 50 கேள்விகள் கேட்கப்படும். இந்த மாதத்தின் 3வது வாரத்தில் 11ம் வகுப்புகளை தொடங்க வேண்டும். 12ம் வகுப்பு மாணவர்களுக்கு கல்வி தொலைக்காட்சி, இணைய வழியில் பாடம் நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.