Sunday, May 04 12:41 pm

Breaking News

Trending News :

no image

இந்தியாவை அதிர வைக்கும் இன்றைய கொரோனா தொற்று…!! அதிகாரிகள் ஷாக்


டெல்லி: இந்தியாவில் 24 மணி நேரத்தில் 2,68,833 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது.

நாடு முழுவதும் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்றின் வேகம் யாரும் எதிர்பார்க்காத அளவில் இருக்கிறது. தொடக்கத்தில் வெகுவாக குறைந்தது போன்று இருந்தாலும் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று உச்சத்தில் உள்ளது.

நேற்று 2,64,202 ஆக ஒருநாள் கொரோனா தொற்று இருந்தது. இன்று அந்த பாதிப்பு மேலும் உயர்ந்து 2,68,833 ஆக பதிவாகி இருக்கிறது. ஒட்டு மொத்தமாக கொரோனா பாதிப்பானது 3 கோடி 68 லட்சத்து 50 ஆயிரத்து 962 ஆக உள்ளது.

24 மணி நேரத்தில் 1 லட்சத்து 22 ஆயிரத்து 684 பேர் கொரோனா தொற்றில் இருந்து நலம் பெற்றுள்ளனர். இதன் மூலம் ஒட்டு மொத்தமாக குணம் பெற்றவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 49 லட்சத்து 47, 390 ஆக இருக்கிறது.

24 மணி நேரத்தில் கொரோனாவுக்கு 402 பேர் பலியாகி உள்ளனர். ஒட்டு மொத்த பலி எண்ணிக்கை 4 லட்சத்து 85 ஆயிரத்து 752 ஆக இருக்கிறது. இதுவரை 156 கோடியே 2 லட்சத்து 51 ஆயிரத்து 117 தடுப்பூசி டோஸ்களை மக்கள் செலுத்திக் கொண்டுள்ளனர்.

Most Popular