Sunday, May 04 12:57 pm

Breaking News

Trending News :

no image

எந்தெந்த மாவட்டங்களில் இன்னிக்கு ஸ்கூல் லீவு..? இதோ வந்தாச்சு அறிவிப்பு


சென்னை: தமிழகம் முழுவதும் கனமழை காரணமாக பல்வேறு மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களை பதம்பார்த்த மிக கனமழை, அப்படியே தென் தமிழகத்தில் குடிபுகுந்துள்ளது. கிட்டத்தட்ட 3 நாட்களாக நெல்லை, தூத்துக்குடி, தென்காசி என பல்வேறு மாவட்டங்களை பந்தாடி வருகிறது.

மழை விடவில்லை என்பதால் கிட்டத்தட்ட 7 மாவட்டங்களில் உள்ள கல்வி நிலையங்களுக்கு இன்று விடுமுறை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

அதன்படி,

நெல்லை

தென்காசி

தூத்துக்குடி

கன்னியாகுமரி

ராமநாதபுரம்

விருதுநகர்

தேனி

ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டு உள்ளது. இதில் தென்காசி, தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் பள்ளிகள், கல்லூரிகளுக்கும், ஏனைய 3 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. கொடைக்கானல் வட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை விடப்பட்டு உள்ளது.

மழை விடுமுறை விடப்பட்டு உள்ளதால் அந்த மாவட்டங்களில் நடைபெற்று வந்த அரையாண்டு தேர்வு ரத்து செய்யப்பட்டு உள்ளது. தேர்வு எப்போது நடைபெறும் என்ற அறிவிப்பும் பின்னர் வெளியிடப்படும் என்றும் தெரிகிறது.

Most Popular