'தல’ அஜித்தை போய் இப்படி…. சர்ச்சையில் சிக்கிய தனுஷ்… கடுப்பில் ரசிகர்கள்…!
சென்னை: நான் தனி ஆள் இல்ல…. என்று தல அஜித் டிரேட் மார்க் டயலாக்கை நடிகர் தனுஷ் பேசி கிண்டலடித்துள்ளது, அஜித் ரசிகர்களை கடுப்பில் கொண்டு போய் விட்டு இருக்கிறது.
ஏக எதிர்பார்ப்பில் வெளியாகி இருக்கிறது நடிகர் தனுஷ் நடிப்பில் வெளி வந்துள்ள ஜகமே தந்திரம். கார்த்திக் சுப்பராஜ் கைவண்ணத்தில் உருவான இந்த படம் கடந்த 18ம் தேதி நெட் பிளிக்சில் வெளியாகி இருக்கிறது.
படம் பற்றிய விமர்சனங்கள் மாறி, மாறி வந்தாலும் தனுஷ் ரசிகர்கள் படு உற்சாகத்தில் உள்ளனர். ஒரு தரப்பு ரசிகர்கள் படம் பரவாயில்லை ரகம் என்றும் மறு தரப்பில் ஓகே என்றும் கலவையாக விமர்சனங்களை கூறி வருகின்றனர்.
இந் நிலையில் படத்தில் தனுஷ் பேசியிருக்கும் ஒரு வசனம் தல அஜித் வேண்டும் என்றே கிண்டல் செய்திருப்பதாக சர்ச்சை எழுந்துள்ளது. படத்தில் ஒரு காட்சி வரும்…. அதில் அத்திப்பட்டி ஒரு கிராமம், நான் தனி ஆள் இல்ல… என்று தனுஷ் பேசி இருக்கிறார்.
இந்த வசனம் சிட்டிசன் படத்தில் தல அஜித்தின் மாஸ் வசனம். இப்பவும் கூட அந்த வசனத்தை கேட்கும் தல ரசிகர்கள் ஆனந்த கூத்தாடுவர். அப்படிப்பட்ட வசனத்தை பேசி தல அஜித்தை தனுஷை கிண்டல் செய்துள்ளார் என்று தனுஷ் திட்டி தீர்த்து ஆதங்கத்தை தணித்து வருகின்றனர்.