Sunday, May 04 01:11 pm

Breaking News

Trending News :

no image

ஒரு கையில் சாப்பாட்டு தட்டுடன்… கதறி, கதறி அழுத போலீஸ்…! பதற வைக்கும் கண்ணீர் வீடியோ


பெரோசாபாத்: காவலர் ஒருவர் கையில் சாப்பாட்டு தட்டை வைத்துக் கொண்டு பொதுமக்கள் முன்னிலையில் கதறி, கதறி அழுத சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

உத்தரப்பிரதேசத்தில் உள்ள பெரோஷாபாத் நகரில் காவலராக இருப்பவர் மனோஜ்குமார். இவர் தான் கையில் சாப்பாட்டு தட்டுடன் ரோட்டில் கதறி கண்ணீர் விட்டவர்.

கையில் காவலர்களுக்கான கேண்டினில் தரப்பட்ட உணவை அப்படியே எடுத்துக் கொண்டு ரோட்டுக்கு வந்திருக்கிறார். வ்ந்தவர் சும்மா இல்லை… தட்டில் இருக்கும் உணவை பொதுமக்களிடம் எடுத்து காட்டி இதை தான் நாங்கள் உண்கிறோம்.. பார்த்தீர்களா? இந்த உணவு எப்படி இருக்கிறது என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்.

சாலையில் வாகனங்களில் வருவோரை மறித்து அழுதபடி தட்டில் உள்ள உணவை எடுத்து காட்டி கதறி உள்ளார். 12 மணி நேரம் வேலைபார்த்துவிட்டு இந்த உணவை நாள்தோறும் சாப்பிட வேண்டுமாம்.

இதை நீங்கள் உங்களுக்கு குழந்தைகளுக்கு தருவீர்களா? உங்கள் வீட்டு நாய் கூட இதை சாப்பிடாது, முதல்வர் காவலர்களின் உணவுக்காக 30 சதவீதம் கூடுதலாக நிதியும் ஒதுக்கி உள்ளார்.

ஆனாலும் எங்களின் நிலை இப்படித்தான் இருக்கிறது என்று கூறியவர் அதன் பின்னர் அழ ஆரம்பித்துவிட்டார். கடும் பணிச்சுமைக்கு நடுவில் சாப்பிடும் உணவு இப்படி இருக்க அந்த ஆவேசத்தில் அவர் பேசிவிட்டதாக கூறப்படுகிறது.

ரோட்டில் சீருடையுடன் காவலர் ஒருவர் இப்படி நடந்து கொண்ட சம்பவம் உ.பி. போலீசார் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளதாக தெரிகிறது.

Most Popular