இலங்கைக்கு மீண்டும் வந்த சோதனை…! அவசரநிலை பிரகடனம்
கொழும்பு: சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட இலங்கையில் மீண்டும் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டு உள்ளது.
இலங்கையில் நிலவும் கடும் பொருளாதார சிக்கல்கள், நெருக்கடிகள் காரணமாக உணவு பொருள், எரிபொருள் என அத்தியாவசிய பொருட்களின் விலை தாறுமாறாக உயர்ந்தது. உணவு பொருட்கள், மருந்து பொருட்கள் ஆகியவற்றின் தட்டுப்பாட்டால் மக்கள் தவித்து வருகின்றனர்.
மக்கள் சீற்றத்தை கண்டு உயிருக்கு அஞ்சிய அதிபர் கோத்தபய ராஜபக்சே மாளிகையை விட்டு ஓடிவிட்டார். இதை தொடர்ந்து அந்நாட்டில் ரணில் விக்ரமசிங்கே பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். ஆகவே சட்டம் ஒழுங்கை கட்டுக்குள் கொண்டு வரும் பொருட்டு இன்று முதல் மீண்டும் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.