Sunday, May 04 12:45 pm

Breaking News

Trending News :

no image

மகப்பேறு விடுப்பு காலம் ஒரு வருடமாக உயர்த்தப்படும்…! அதிமுக கவர்ச்சி வாக்குறுதி


சென்னை: மகப்பேறு விடுப்பு காலம் ஒரு வருடமாக உயர்த்தப்படும் என்று அதிமுக தமது தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்துள்ளது.

தேர்தல் அறிக்கையின் சிறப்பு அம்சங்கள்:

மத்திய அரசு பணிக்கு மாநில அளவிலான தேர்வு நடத்தப்படும்.

தமிழ் மொழிப்பாடம் பள்ளிகளில் கட்டாயமாக்கப்படும்.

உயர்நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக தமிழ் கொண்டுவரப்படும்.

ஈழத்தமிழர்கள் உள்பட 7 பேர் விடுதலை செய்யப்படுவர்.

ஈழத் தமிழர்களுக்கு ஐக்கிய நாடுகள் சபை மூலம் நிரந்தரதீர்வு.

காத்திருக்கும் விவசாயிகள் அனைவருக்கும் மின் இணைப்பு.

வேளாண் விளை பொருள்கள் லாபகரமான விற்பனைக்கு வழிகாட்டும் அமைப்பு உருவாக்கப்படும்.

பனைமரம் வளர்ப்பு திட்டம் ஊக்குவிக்கப்படும்.

ஒருங்கிணைந்த குளிர்சாதனக் கிடங்கு அமைக்கப்படும்.

நெல், கரும்புக்கான குறைந்தபட்ச ஆதார விலை உயர்த்தப்படும்.

நம்மாழ்வார் பெயரில் வேளாண்மைப் பல்கலைக் கழகம் அமைக்கப்படும்.

மகப்பேறு விடுப்பு காலம் ஒரு வருடமாக உயர்த்தப்படும்.

100 நாள்கள் வேலை 150 நாள்களாக உயர்த்தப்படும்.

சாதிவாரி கணக்கெடுப்பின்படி அனைத்து சாதியினருக்கும் இடஒதுக்கீடு.

மதுக்கடைகளின் எண்ணிக்கை படிப்படியாக குறைக்கப்படும்.

நகரப் பேருந்துகளில் பெண்களுக்கு 50 சதவிகித பயணக் கட்டண சலுகை.

நெசவாளர்களுக்கு ரூ.1 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படும்

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்குத் தேவையான கடன் உதவி வழங்கப்படும்.

கோதாவரி-காவேரி இணைப்புத் திட்டத்தை மேற்கொள்ள தீவிர நடவடிக்கை.

அமைப்புசார தொழிலாளர்களுக்கு ரூ.10,000 வட்டியில்லா கடன்

வேலை இல்லாத இளைஞர்களுக்கு இரட்டிப்பு ஊக்கத்தொகை வழங்கப்படும்

இளைஞர்களுக்கு குறைந்தவட்டியுடன் தொழில் தொடங்க நிதியுதவித் திட்டம்.

9, 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு சத்துணவுத் திட்டம்.

இலங்கை தமிழ் அகதிகளுக்கு இரட்டைக் குடியுரிமை. 

Most Popular