முதலமைச்சராக பதவியேற்ற 2வது நாளில் கொரோனாவா..? பதறும் அதிகாரிகள்..!
புதுச்சேரி: புதுச்சேரி முதலமைச்சராக பதவியேற்றுள்ள ரங்கசாமி உடன் இருந்த பலருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.
நேற்றைய தினம் புதுச்சேரி யூனியன் பிரதேச முதலமைச்சராக என்ஆர் காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி பதவியேற்று கொண்டார். தேர்தல் வெற்றியை தொடர்ந்து சில நாட்கள் முன்பாக அவர் சேலத்தில் உள்ள அப்பா பைத்திய சாமி கோயிலுக்கு சென்று வந்துள்ளார்.
அவருக்கு லேசான காய்ச்சல் ஏற்பட சாப்பிட்டதில் ஏதேனும் கோளாறு இருக்கலாம் என்று அவருடன் இருந்தவர்கள் கூறி உள்ளனர். ரங்கசாமியுடன் தொடர்பில் இருந்த புவனா என்ற பெண்ணுக்கு கொரோனா தொற்று இருப்பதாக உறுதியாகி உள்ளது.
இந்த சூழலில் முதலமைச்சர் பதவியேற்பு விழாவும் நடந்து முடிந்துள்ளது. அதேநேரத்தில் முதலமைச்சர் ரங்கசாமியுடன் தொடர்பில் இருந்த ஜவகர் எ என்பவருக்கும் கொரோனா பரவல் உறுதியாகி இருக்கிறது. முதலமைச்சர் ரங்கசாமியுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு கொரோனா இருப்பதால் பதவியேற்பு விழாவில் வந்து சென்ற உயரதிகாரிகள், ஆளுநர் மாளிகை அலுவலர்கள் உள்ளிட்ட பலர் அச்சத்தில் உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.