பைக்கில் பெட்ரோல் இல்லியா..? ரூ.250 பைன்…! ஷாக்கிங் நியூஸ்
எர்ணாகுளம்: கேரளாவில் வண்டியில் பெட்ரோல் இல்லை என்று கூறி இரு சக்கர வாகன ஓட்டிக்கு போலீசார் 250 ரூபாய் அபராதம் விதித்துள்ள வினோத சம்பவம் அரங்கேறி இருக்கிறது.
இரு சக்கர வாகனம் ஓட்டுபவர்களுக்கு தான் ரோட்டில் எத்தனை விதமான சோதனை. எப்படியாவது ஏதாவது ஒரு காரணம் கூறி பைன் கட்டுமாறு போலீசார் வலியுறுத்துவது எல்லா ஊர்களிலும் நடந்து வருகிறது.
ஹெல்மெட் இல்லாதது, ஓவர் ஸ்பீடு, ட்ரிபிள்ஸ் செல்வது என போலீசார் பைன் போட்ட காலம் போய்… இப்போது போதிய பெட்ரோல் வண்டியில் இல்லை என்று கூறி அபராதம் போட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.
கேரளாவில் தான் இப்படி ஒரு தினுசான சம்பவம் நடந்திருக்கிறது. எர்ணாகுளத்தில் இரு சக்கர வாகனத்தில் ஒருவர் சென்று கொண்டிருந்தார். அவரை மடக்கிய காவல்துறையினர் வழக்கமான சோதனைகளை செய்தனர்.
அனைத்து ஆவணங்களும் மிக சரியாக இருந்திருக்கிறது. ஆனால் 250 ரூபாய் பைன் என்று கூறி அதற்கான சீட்டை வாகன ஓட்டி கையில் திணித்துள்ளனர். குழம்பி போன வாகன ஓட்டி… அந்த சீட்டை பார்க்க தலை சுற்றாத குறை.
வாகனத்தில் தேவையான அளவு பெட்ரோல் இல்லை… 250 ரூபாய் அபராதம் என்று பைன் போட்டதற்கான காரணம் கூறப்பட்டு இருக்கிறது. இந்த சம்பவத்தால் அனுபவப்பட்ட அந்த வாகன ஓட்டி… அந்த 250 ரூபாய் சீட்டை அப்படியே போட்டோ எடுத்து இணையத்தில் தட்டிவிட்டு இருக்கிறார்.
அவ்வளவு தான்… கேரளா போலீசாரை அனைவரும் கரிச்சு கொட்டு வருவதோடு இஷ்டத்துக்கு கருத்துகளை முன் வைத்து வருகின்றனர்.