Sunday, May 04 12:37 pm

Breaking News

Trending News :

no image

#Thalapathy68 வெளியான புதிய தகவல்…! தூள் கிளப்பிய ட்வீட்


நடிகர் விஜய்யின் 68வது படம் பற்றிய புதிய தகவல் வெளியாகி ரசிகர்களை பரபரக்க வைத்துள்ளது.

நடிகர் விஜய்.. துள்ளல் நடனம், ஸ்டைலான டயலாக் டெலிவரி, ஆக்ஷன் என கலவையான இவரது நடிப்பு தனி ரகம். இவர் இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி68 #Thalapathy68 படத்தில் நடிக்கிறார். படத்துக்கு தற்காலிகமாக #Thalapathy68 என பெயர் வைக்கப்பட்டு உள்ளது.

படத்தில் பிரபுதேவா, பிரசாந்த், ஜெயராம், சினேகா என பெரிய பட்டாளமே நடிக்கிறது. கல்பாத்தி அகோரத்தின் ஏஜிஎஸ் நிறுவனம் படத்தை தயாரிக்கிறது.

கதைக்களம் என்ன என்பது பற்றிய எவ்வித தகவலும் கசியாத பட்சத்தில் படப்பிடிப்பும் முடிந்துவிட்டது. படத்தின் அதிகாரப்பூர்வ பெயர் என்ன என்பது பற்றி புதிய தகவல் ஒன்றை படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி டுவிட் போட்டு கலக்கி இருக்கிறார்.

https://twitter.com/archanakalpathi/status/1737321890199519279

அதில் அவர் கூறி இருப்பதாவது:

படத்தின் அனைத்து தகவல்கள் பற்றியும் பார்த்துள்ளேன். உங்களின் அன்புக்கு ரொம்பவும் நன்றி. படம் பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் வரை காத்திருங்கள்.

இந்த படத்தின் பெயர் பற்றி பல தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. ஆனால் படத்தின் தலைப்பு அவை கிடையாது என்று கூறி இருக்கிறார். இந்த புதிய தகவலை அறிந்த ரசிகர்கள் கொண்டாட்டத்தில் இருக்கின்றனர்… எப்போது படத்தின் பெயர் தெரிய வரும் என்றும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

Most Popular