Sunday, May 04 12:42 pm

Breaking News

Trending News :

no image

தமிழகத்தில் இடைத்தேர்தல் நடத்தப்படுமா…? தேர்தல் ஆணையம் அறிவிப்பு


டெல்லி: தமிழகத்தில் காலியாக உள்ள திருவொற்றியூர், குடியாத்தம் சட்டசபை தொகுதிகளுக்கு இந்ததாண்டு இடைத்தேர்தல் இல்லை என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: தமிழகத்தின் திருவொற்றியூர், குடியாத்தம், அசாமின் ரங்கபாரா, ஷிப்சாகர், கேரளாவின் குட்டநாடு, சவாரா, மே.வங்கத்தின் பலகட்டா சட்டசபை தொகுதிகள் காலியாக உள்ளன.

மேற்கண்ட தொகுதிகளில் தேர்தல் நடத்துவதில் கடினம் மற்றும் சில பிரச்னைகள் உள்ளதாக 4 மாநில தலைமை செயலாளர்கள், தலைமை தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அசாம், கேரளா, தமிழகம் மற்றம் மே.வங்க தலைமை செயலகத்தின் பதவிக்காலம் முறையே, 31.05.2021, 01.06.2021, 24.05.2021, 30.05.2021 அன்றுடன் நிறைவடைகிறது. எனவே அதை கருத்தில் கொண்டு, மேற்கண்ட 7 சட்டசபை தொகுதிகளில் தேர்தல் நடத்துவதில்லை என முடிவு செய்யப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Most Popular