#CAA திருப்பியடித்த மத்திய அரசு
டெல்லி: நாடு முழுவதும் குடியுரிமை திருத்தச் சட்டமான CAA அமலுக்கு வந்துள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
இதுதொடர்பான அறிவிக்கையை மத்திய அரசு வெளியிட்டு இருக்கிறது. அரசிதழிலும் இந்த அறவிக்கை பதிவேற்றப்பட்டு உள்ளது. இந்தியாவின் அண்டைநாடுகளில் உள்ள சிறுபான்மை இந்துக்கள், சீக்கியர்கள், கிறித்துவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க இந்த சட்டம் வழி ஏற்படுத்தி உள்ளது.
பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் போன்ற நாடுகளில் மத ரீதியிலான சிக்கல்கள் அல்லது இன்னல்களுக்க ஆளாகி 2014ம் ஆண்டுக்கு முன்னர் இந்தியாவில் குடியேறிய இந்து, பார்சி, சீக்கிய, பவுத்த, சமண மக்கள் குடியுரிமை பெற்றுள்ளனர்.
இந்தியாவில் குடியேறி இருக்கும் இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க இந்த சட்டத்தில் இடமில்லை. அமலாகி உள்ள இந்த சட்டம் குறித்து கருத்து தெரிவித்துள்ள பாஜக முக்கிய தலைவர்கள், பிரமுகர்கள், தேர்தலில் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றி இருப்பதாக கூறி உள்ளனர்.
ஆனால் தேர்தல் அறிவிப்பு இன்னும் ஒரு சில தினங்களில் வெளியாக இருக்கும் பட்சத்தில், மத்திய பாஜக அரசுக்கு எதிராக இருக்கும் அதிருப்தியை திசை திருப்பவே இப்படி அறிவிப்பை வெளியிட்டு இருப்பதாக எதிர்க்கட்சிகள் குறை கூறி இருக்கின்றன.