Sunday, May 04 11:48 am

Breaking News

Trending News :

no image

மறைந்தார் காம்ரேட் தா. பாண்டியன்…! செம்மாந்த வணக்கம் செலுத்தும் அரசியல் தலைவர்கள்…!


சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் இன்று காலமானார். அவருக்கு வயது 89.

கடும் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை ராஜீவ் காந்தி மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை பெற்று வந்தார்.. தா.பாண்டியன் கவலைக்கிடமான நிலையில் இருந்த அவரை, கட்சியின் மாநிலத் தலைவர் முத்தரசன் உள்ளிட்டோர் கண்காணித்து வந்தனர்.

ஆனாலும் அவரின்  உடல்நிலையில் எவ்வித முன்னேற்றம் ஏற்படவில்லை.  சுகாரார செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன், சென்னை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் டாக்டர் தேரணி ராஜன், டாக்டர் தினேஷ் உள்ளிட்ட உயர்நிலை சிறப்பு மருந்துவர்கள் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.

ஆயினும், அவர் சிகிச்சை பலனின்றி இன்று காலை 10.05 மணியளவில் உயிரிழந்தார்.அவருக்கு வயது 89. அவரின் மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் செம்மாந்த வணக்கமும், இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Most Popular