Sunday, May 04 12:34 pm

Breaking News

Trending News :

no image

எஸ்பிபி சொத்து இவ்வளவு தானா…? கலங்கிய ரசிகர்கள்


சென்னை: மறைந்த பாடகர் எஸ்பிபியின் சொத்துகள் எவ்வளவு என்பது பற்றிய விவரங்கள் இணையத்தில் உலா வந்து ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்துகின்றன.

தமிழ் திரையுலகம் மட்டுமல்லாமல் இந்திய திரையுலகில் முன்னணி பாடகராக திகழ்ந்தவர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் கொரோனா தொற்று காரணமாக கடந்த வெள்ளிக்கிழமை காலமானார்.  அவரின் மறைவு தமிழ் திரையுலகிற்கு மட்டுமல்லாமல் இந்திய திரையுலகிற்கே பெரும் இழப்பையும், துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

அவர் தமது திரைப்பயணத்தில் 40,000 பாடல்களுக்கும் மேல் பாடியுள்ளார். தான் பாடும் பாடல்களுக்கு எப்போதுமே அதிக சம்பளம் வாங்கியதில்லை என வெளிப்படையாகவும் அவர் பலமுறை அறிவித்துள்ளார்.

50 ஆண்டுகள் கலைத்துறையில் இருந்தும் ரூ.120 கோடி மட்டுமே தமது சொத்தாக  வைத்துள்ளாராம் எஸ்பிபி. தற்போது தான் களத்துக்கு வந்த நடிகர்கள் கூட ஒரே படத்தில் 50 கோடிக்கு மேல் சம்பளம் வாங்குகின்றனர். ஒரு சில படங்களில் நடித்த உடனே பல கோடிகளுக்கு சொத்துகளை வாங்கி குவிக்கின்றனர்.

100க்கணக்கான கோடி ரூபாயை சேர்த்து வைக்கின்றனர். ஆனால் கிட்டத்தட்ட 50 ஆண்டுகள் திரைத்துறையில் இருந்தும் இவ்வளவு தான் சொத்து சேர்த்தாரா என்று அவரது ரசிகர்கள் ஆச்சரியம் அடைகின்றனர்.

Most Popular