நாளை டாஸ்மாக் திறக்கப்படுமா…? இல்லையா…? பரபரக்கும் குடிமகன்கள்….!
சென்னை: தமிழகத்தில் நாளை டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாது என்று அதன் மேலாண் இயக்குநர் அறிவித்துள்ளார்.
என்ன செய்தும் கட்டுப்படுத்த முடியாமல் போன கொரோனாவுக்கு கடிவாளம் போட ஒரு வாரம் எந்த தளர்வுகளும் இன்றி கடுமையான முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டு உள்ளது. நாளை மறுநாள் இந்த ஊரடங்கு நடைமுறைக்கு வருகிறது.
மே 24ம் தேதி முதல் பாலகங்கள், மருந்தகங்கள், நாட்டு மருந்து கடைகள் தவிர வேறு எந்த கடைகளும் ஒரு வாரம் இயங்காது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. ஒரு இடம் விட்டு மற்றொரு இடத்துக்கு செல்லவும்க கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.
மற்ற அனைத்து கடைகளும் திறக்கப்படுகிறது. எது எப்படி இருந்தாலும் ஒரு தரப்பினர் நாளை மதுக்கடைகள் திறக்கப்படுமா என்று காத்திருக்கின்றனர். அவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் இந்த 2 நாட்களும் டாஸ்மாக் கடை திறப்பு இல்லை என்று டாஸ்மாக் மேலாண் இயக்குநர் அறிவித்து உள்ளார்.
கடைகளை திறந்தால் மது குடிப்போர் ஒரே நேரத்தில் எந்த கட்டுப்பாடுகள் இன்றி குவியக்கூடும் என்பதால் மதுக்கடைகள் திறக்க அனுமதி இல்லை என்று அவர் கூறி உள்ளார். நாளை அனைத்து தரப்பினருக்கான கடைகள் திறக்கப்படக்கூடிய நிலையில் டாஸ்மாக் கடைகள் மட்டும் அடைக்கப்பட்டு இருப்பது குடிமகன்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.