Sunday, May 04 12:56 pm

Breaking News

Trending News :

no image

முதல்வரான பின்.. பிரதமர் மோடிக்கு ஸ்டாலின் முதல் கடிதம்…! எதற்கு..?


சென்னை: தமிழகத்துக்கு கூடுதல் ஆக்சிஜன் வழங்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் பிரதமர் மோடியை முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

இது குறித்து முதலமைச்சர் ஸ்டாலின், பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதி உள்ளார். அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது: தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்தற்கு தாங்கள் வாழ்த்தினீர்கள், மிக்க நன்றி. பதவி ஏற்றவுடன் மருத்துவ நிபுணர்கள், கலெக்டர்கள், மூத்த அதிகாரிகளுடன் கொரோனா நிலவரம் குறித்து ஆலோசித்தேன்.

தமிழகத்தில் தற்போது நிலவி வரும் தீவிர மருத்துவ ஆக்சிஜன் பற்றாக்குறை பற்றி கவனத்துக்கு கொண்டு வருகிறேன். தற்போதைய சூழலில் நாள் ஒன்றுக்கு தமிழகத்துக்கு 440 மெட்ரிக் டன் ஆக்சிஜன் தேவை உள்ளது.

2 வாரங்களில் 400 மெட்ரிக் டன் உயர்ந்து, அது பின்னர் 840 மெட்ரிக் டன் ஆக உயர வாய்ப்பு இருக்கிறது. ஆனால் தமிழகத்துக்கு தேசிய ஆக்சிஜன் திட்டப்படி செய்யப்படும் 220 மெட்ரிக் டன் ஆக்சிஜன் ஒதுக்கீடு பூர்த்தி செய்யாது.

எனவே தமிழகத்துக்கு அளித்த வாக்குறுதியின்படி, தமிழகத்துக்கு உடனே 476 மெட்ரிக் டன் ஆக்சிஜனை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும்  20 க்ரையோஜெனிக், கன்டெய்னர்களை ரயில் போக்குவரத்து வசதி மூலமாக தமிழகம் கொண்டு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த கடிதத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.

Most Popular