Bigg Boss Tamil: ரூ.100 கோடியா…? வாயை பிளக்க வைக்கும் கமல் சம்பளம்
சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியில் கமல்ஹாசனுக்கு வழங்கப்பட்ட சம்பளம் என்ன என்பது பற்றிய பல்வேறு தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவி கிடக்கின்றன.
105 நாட்களாக சின்னத்திரையில் ஒளிப்பரப்பான பிக்பாஸ் சீசன் 6 நிறைவு பெற்று இருக்கிறது. வின்னராக அசீம் அறிவிக்கப்பட்டு அவருக்கு பரிசும் அளிக்கப்பட்டு உள்ளது. பரபரப்பாக நடந்து வந்த இந்நிகழ்ச்சி முடிந்து விட்டாலும் அது தொடர்பாக வெளியாகும் தகவல்கள் முடிந்தபாடில்லை.
யாருக்கு எவ்வளவு பணம் கொடுக்கப்பட்டு உள்ளது என இணைய உலகில் ஒரு போட்டியே நடந்து வருகிறது. அந்த அடிப்படையில், நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய கமல்ஹாசனுக்கு தந்ததாக கூறப்படும் சம்பளம் தான் ஹாட் டாப்பிக்காக உள்ளது.
பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசன் முதல் தற்போது வரையான அனைத்து சீசன்களிலும் தமக்கென ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர் கமல்ஹாசன். 6வது சீசனில் 15 எபிசோடுகளை தொகுத்து வழங்கி இருக்கிறார். கடந்தகால சீசன்களை விட இம்முறை அவருக்கு அதிக சம்பளம் பேசப்பட்டு வழங்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
அதாவது, 15 எபிசோடுகளுக்கு 75 கோடி ரூபாய் ஊதியம் பெற்றிருக்கிறார் என்று ஒரு தகவல் உலா வந்து கொண்டிருக்கிறது. அதாவது ஒரு எபிசோடுக்கு 5 கோடி ரூபாய் என்ற கணத்தில மொத்தம் 75 கோடி என கூறப்படுகிறது.
இப்படி ஒரு பக்கம் சமூக வலைதளங்களில் தகவல் பரவி இருக்க, மறுபுறமோ வேறு ஒரு தகவல் சம்பளம் பற்றி தாறுமாறாக உலாவி வருகிறது. அதாவது ஒரு எபிசோடுக்கு 5 கோடி என மொத்தம் 75 கோடி ரூபாய், இதுதவிர ஸ்பெஷலாக 25 கோடி ரூபாய் தனியாக தரப்பட்டு உள்ளதாகவும் ஒரு தகவல் ஜெட் வேகத்தில் பரவி வருகிறது.
ஊதியம் பற்றிய தகவல்கள் உறுதிப்படுத்தப்படவில்லை என்றாலும்… எத்தனை கோடி ரூபாய் சம்பளம் வாங்கினால் என்ன..? பிக் பாஸ் நிகழ்ச்சியை அருமையாக தொகுத்து வழங்கினார், பிறகென்ன என்ற கருத்துகளும் இணைய ஊடகங்களில் வெளியாகி வருகிறது.