கல்யாணத்துக்கு இ - பதிவு அவசியமா..? இன்ப அதிர்ச்சி தந்த தமிழக அரசு...!
சென்னை: இ பதிவு வலைதளத்தில் இருந்து திருமணம் என்ற பிரிவை தமிழக அரசு நீக்கி இன்ப அதிர்ச்சி அளித்துள்ளது.
கொரோனா பரவலை தடுக்க தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. அதில் ஒன்று இ பதிவு என்கிற இணைய பதிவு முறை. மாவட்டத்துக்குள்ளும், மாவட்டங்களுக்கு இடையேயும் பயணம் செய்ய இ பதிவு அவசியம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
மருத்துவ சிகிச்சை, முதியோர் பராமரிப்பு, இறப்பு, இறப்பு சார்ந்து காரியங்கள், திருமணம் ஆகிய காரணிகளை வகைப்படுத்தி இவற்றுக்கு இ பதிவு அவசியம் என்று அறிவித்திருந்தது. இப்போது இந்த காரணிகளில் திருமணம் என்ற பிரிவை தமிழக அரசு நீக்கி உள்ளது.
இது குறித்து தமிழக அரசு அளித்துள்ள விளக்கத்தில், திருமணம் என்ற காரணியை சிலர் தவறாக பயன்படுத்தி வருகின்றனர். ஆகையால் அதிக மக்கள் வெளியேறும் சூழல் நிலவுவதில் இந்த பிரிவு நீக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.