எல்லோரும் வாங்க…! கொரோனா ஒழிப்பில் முதல்வர் ஸ்டாலினின் அடுத்த ஆக்ஷன்…!
சென்னை: கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் பற்றிய ஆலோசனைகளுக்காக நாளை அனைத்துக் கட்சி கூட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் நாளை கூட்டி உள்ளார்.
கொரோனா தொற்றின் வேகம் இப்போதைக்கு குறைந்தது மாதிரி தெரிய வில்லை. இன்று மட்டும் கொரோனாவின் ஒருநாள் தொற்று 30 ஆயிரத்தை கடந்து அதிர்ச்சியை அளித்துள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், சிகிச்சை மையங்கள், பரிசோதனைகள் அதிகரிப்பு என ஒருபக்கம் அரசு வேகம் காட்டினாலும் தொற்றுகளின் எண்ணிக்கை குறையவில்லை.
இந் நிலையில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளுக்காக அனைத்து கட்சிகளும் ஆலோசனைகள் வழங்க நாளை அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது. அதன்பொருட்டு நாளை சட்டமன்ற கட்சி தலைவர்களின் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது
நாளை மாலை 5 மணிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் இந்த கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, பாமக, காங்கிரஸ், தவாக, இடதுசாரிகள் உள்ளிட்ட சட்டசபையில் இடம்பெற்றுள்ள 13 கட்சிகளையும் அழைத்து தமிழக அரசு ஆலோசனைகளை கேட்க இருக்கிறது.