இதோ ரிலீஸ்… வனிதாவின் அடுத்த வீடியோ…! வாயை பிளந்த ரசிகாஸ்
நடிகை வனிதா விஜயகுமாரின் அடுத்த வீடியோவை கண்டு ரசிகர்கள் வாயடைத்து போயிருக்கின்றனர்.
கடந்த 2 வாரங்களுக்கும் மேலாக ஏகப்பட்ட சர்ச்சைகளில் சிக்கி வலம் வந்து கொண்டிருப்பவர் வனிதா விஜயகுமார். 4வது திருமணம் செய்து கொண்டுவிட்டார் என்கிற ரேன்ஜூக்கு தகவல்கள் வெளியாகி கோலிவுட்டை பரபரக்க வைத்தன.
அதிலும், காமெடி நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசனுடன் 4வது திருமணம் நடந்தேவிட்டது என்று ஒரு போட்டோ இணையத்தில் உலாவி தள்ளியது. அதிலும் அந்த போட்டோவை தமது இன்ஸ்டாகிராமில் ரிலீஸ் செய்தார் வனிதா விஜயகுமார்.
பின்னர் தான் தெரிந்தது… பிக்கப் ட்ராப் என்ற படம் ஒன்றுக்கு எடுக்கப்பட்ட காட்சி என்று. படத்தின் புரோமோஷனுக்காக வனிதா விஜயகுமார் இந்த வேலை பார்த்திருக்கிறார் என்று தெரிந்தது.
இப்போது அனைத்து விஷயத்தையும் ஓரம்கட்டி வைக்கும் அளவுக்கு ஒரு வீடியோவை வெளியிட்டு ரசிகர்கள் மிரள வைத்துள்ளார். அதாவது புடவை கட்டிக் கொண்டு, புல்லட் ஒன்றில் பறக்கிறார். இதில் சுற்றிலும் தாதாக்கள் வேறு…
இந்த வீடியோவை வனிதா விஜயகுமார் தமது இன்ஸ்டாகிராமில் போட்டு தள்ள, ரசிகர்கள் வாயடைத்து போயிருக்கின்றனர். புல்லட் ஓட்டும் காட்சி ஷூட்டிங்குக்கான காட்சியாம்…. மஞ்ச காக்கா வெள்ளக்குருவி என்ற படத்தில் வனிதா விஜயகுமார் நடித்து வருகிறார்.
படத்தில் அவரது பெயர் பஞ்சாயத்து பரமேஸ்வரியாம்… அதிலும் பெண் தாதாவாம்… அதனால் தான் புல்லட்டும் எங்கோ பஞ்சாயத்துக்கு போகும் சீன் ஒன்று இப்படி எடுக்கப்பட்டதாம்…. அதை வீடியோ எடுத்து உலவ விட்டு உள்ளார் வனிதா விஜயகுமார். எல்லாவற்றையும் பார்க்கும் ரசிகர்கள் இவரது அலம்பல் தாங்க முடியலை.. என்கிற ரேன்ஜூக்கு புலம்ப ஆரம்பித்து உள்ளனர்.