குரூப் 4 தேர்வுக்கு அப்ளை பண்ணி இருக்கீங்களா..? இதை கட்டாயம் தெரிஞ்சுக்குங்க..!
சென்னை: குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு ஹால் டிக்கெட் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் விஏஓ, இளநிலை உதவியாளர்கள் உள்ளிட்ட 7382 காலி பணியிடங்களுக்கு குரூப் 4 தேர்வு நடக்க உள்ளது. இந்த தேர்வை எழுத மொத்தம் 21 லட்சம் பேர் விண்ணப்பித்து உள்ளனர்.
தேர்வு வரும் 24ம் தேதி நடக்க இருக்கிறது. அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வரும் நிலையில் ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டு உள்ளது. ஹால் டிக்கெட்டை www.tnpsc.gov.in என்ற தளத்தில் சென்று பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதற்கு ஓடிஆர் கணக்கு எண்ணை பயன்படுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.