கடைசியில் பிரதமர் மோடியையே ‘வச்சு’ செஞ்சுட்டாய்ங்க..! இது அதிகாலை ‘ஷாக்’…!
டெல்லி: பிரதமர் மோடியின் ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பிரதமர் மோடியின் தனிப்பட்ட வலைத்தளத்துடன் டுவிட்டர் கணக்கு இணைக்கப்பட்டுள்ளது. அந்த ட்விட்டர் கணக்கு இப்போது மர்ம நபர்களால் ஹேக் செய்யப்பட்டு இருக்கிறது. இன்று அதிகாலை 3:15 மணியளவில் இந்த கணக்கு ஹேக் செய்யப்பட்டதாக தெரிய வந்துள்ளது.
ஹேக் செய்யப்பட்ட மோடியின் இந்த ட்விட்டர் கணக்கில் தான் 2.5 மில்லியன் பாலோயர்ஸ் உள்ளனர். மோடியின் ட்விட்டர் பக்கத்தில், கொரோனா வைரஸ் காரணமாக பிரதமரின் தேசிய நிவாரண நிதிக்கு பிட்காயின் வழியாக பணம் அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று டுவிட்டர் பதிவு வெளியிடப்பட்டு உள்ளது.
இந்த சம்பவம் குறித்து டுவிட்டர் தரப்பு விசாரணையைத் தொடங்கி இருக்கிறது. இது பற்றி டுவிட்டர் விளக்கம் அளித்திருப்பதாவது: மற்ற கணக்குகள் ஹேக் செய்யப்படவில்லை. கணக்கை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.