‘அண்ணாத்த’ எப்போ ரிலீஸ்…? ரெடியாகும் ரஜினி ரசிகாஸ்..!
சென்னை: நவம்பர் 4ம் தேதியன்று அதாவது தீபாவளி அன்று அண்ணாத்த படம் ரிலீஸ் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
ரஜினி ரசிகர்கள் மட்டுமல்ல… ஒட்டுமொத்த திரையுலகமும் எதிர்பார்த்து காத்து கொண்டு இருக்கும் படம் தான் அண்ணாத்த. கொரோனாவின் கோர தாண்டவத்தால் படப்பிடிப்பு நின்று, நின்று பின்னர் ஒருவழியாக முடிந்தது.
படத்தில் தமது போர்ஷனை ஸ்பீடாக முடித்துவிட்டு மருத்துவ பரிசோதனைக்காக அண்ணாத்த ரஜினி அமெரிக்கா பறந்துவிட்டார். படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் படு ஸ்பீடாக போய் கொண்டு இருக்கிறது.
படம் எப்போது என்ற அனைவரும் எதிர்பார்த்திருந்த வேளையில் தான் முக்கிய அறிவிப்பை தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் வெளியிட்டு இருக்கிறது. டுவிட்டரில் அண்ணாத்த தீபாவளி ரிலீஸ் என்பதை உறுதி செய்து, பர்ஸ்ட் லுக்கையில் வெளியிட்டு அசத்தி இருக்கிறது. நவம்பர் 4 ம் தேதியான தீபாவளியன்று படம் தியேட்டர்களில் ரிலீஸ் ஆகிறது.
படத்தின் பர்ஸ்ட் லுக்கை கண்டு ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். பளபளப்பான வெள்ளை சட்டையில் படு இளமையாக ரஜினி இருப்பதை கண்டு ஏக எதிர்பார்ப்பில் அவர்கள் இருக்கின்றனர்.
அண்ணாத்த படத்தின் அட்டகாச பர்ஸ்ட் லுக் தான் ரசிகர்களின் பேச்சாக இருக்கிறது. பர்ஸ்ட் லுக் போஸ்டரை பலரும் இணையத்தில் இஷ்டத்துக்கு பகிர்ந்து கொண்டு குஷியாக உள்ளனர்.
தொடக்கத்தில் பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்ட அண்ணாத்த படம் ரிலீஸ் தேதி ரசிகர்களை கொண்டாட்டத்தின் உச்சிக்கே சென்று சேர்த்துள்ளது.