அண்ணாத்த பட யூனிட்டில் கலங்கிய ரஜினி…! எதற்காக…?
இனி நான் படத்தில் நடிப்பேனா என்று தமக்கே தெரியாது என்று கலங்கி இருக்கிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.
திரையுலகத்துக்கு இந்தாண்டு எப்படி இருக்கப் போகிறது என்று கணிக்க முடியாத ஒன்றாக தான் இருக்கிறது. எது எப்படி இருந்தாலும் அண்ணாத்த படத்தை தீபாவளிக்கு திரைக்கு கொண்டே வருவது என்று படத்தயாரிப்பு குழு படு தீவிரமாக இறங்கி இருக்கிறது.
படத்தில் ரஜினியின் அனைத்து காட்சிகளும் படமாக்கப்பட்டுவிட்டன. 2019ம் ஆண்டு தொடங்கப்பட்ட ஷூட்டிங்கில் கிட்டத்தட்ட 90 சதவீதம் முடிந்துவிட்டது. அடுத்து நயன்தாரா, மீனா சம்பந்தப்பட்ட காட்சிகள் தான் பாக்கி. பட ஷுட்டிங்கின் போது சைட்டில் எடிட்டிங் பணியும் முடிக்கப்பட்டு விட்டது.
அனேகமாக வரும் நவம்பர் 4ம் தேதி படம் ரிலீசாகும் என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில் ஐதரபாத் பட யூனிட்டில் ரஜினி கலங்கிய விவகாரம் தான் இப்போது கோலிவுட்டில் பேச்சாக உள்ளது. படப்பிடிப்பின் கடைசி நாளில் எல்லோரிடமும் ரஜினி பேசினாராம்.
இன்னும் 2 படங்களிலாவது நடிக்கலாம் என்று நினைக்கிறேன், ஆனால் உடம்பு ஒத்துழைக்குமா என்று தெரியவில்லை. என்னோட திரை வாழ்க்கையில் அண்ணாத்த படத்தை நான் முக்கியமாக படமாக பாக்குறேன். நல்லபடியாக அந்த படத்தை முடிச்சு கொடுத்திட்டேன். எல்லாரும் பத்திரமாக இருங்க என்று உருகியிருக்கிறாராம்.