Sunday, May 04 12:28 pm

Breaking News

Trending News :

no image

திமுகவின் அண்டப்புளுகு…! வச்சு செஞ்ச நெட்டிசன்ஸ்..!


சென்னை: 8 வழிச்சாலை போடக்கூடாது என்று அமைச்சர் எ.வ. வேலு சொல்லி வைக்க நெட்டிசன்கள் திமுகவை உண்டு இல்லை என்று உலுக்கியும், உரித்தும் வருகின்றனர்.

தமிழகத்தில் 8 வழிச்சாலை திட்டத்தை அவ்வளவு ஈசியாக யாரும் மறக்க முடியாது. சேலம் சென்னை இடையே உள்ள தொலைவு 277 கிமீ. இந்த சாலையை 10 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் எட்டு வழிச்சாலையாக மாற்றும் திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது.

இந்த திட்டத்தை நிறைவேற்றக்கூடாது என்று கடும் எதிர்ப்பு கிளம்பியது. விவசாய அமைப்புகள், சமூக ஆர்வலர்கள் என ஒட்டு மொத்த தமிழகமே எதிர்ப்பு குரல் எழுப்பியது. திட்டம் அறிவிக்கப்பட்ட போது எதிர்க்கட்சியாக இருந்த திமுகவும் கடுமையாக எதிர்த்தது.

பல்வேறு விவசாய சங்க அமைப்பினரும் 8 வழிச்சாலை திட்டத்தை ரத்து செய்ய. சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற கோரிக்கை வைத்தனர். திட்டத்துக்கு எதிராக திமுகவும் போராடியது.

ஒரு கட்டத்தில் இந்த திட்டத்தை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. இது எடப்பாடி அரசுக்கு விழுந்த மரண அடி என்று அப்போது ஸ்டாலின் அறிக்கை விட்டிருந்தார். இதெல்லாம் அப்போது நடந்த சம்பவங்கள்.

ஆனால் இப்போது திமுக ஆட்சியில் உள்ள நிலையில் அமைச்சர் எவ வேலு ஒரு கருத்தை கூறி இருக்கிறார். அவர் கூறியதாவது: திமுக எதிர்க்கட்சியாக இருந்த தருணத்தில் 8 வழிச்சாலை குறித்து பேசிய முதல்வர் ஸ்டாலின், திமுக சாலை போடுவதற்கு எதிரி அல்ல.

விவசாயிகளை அழைத்து பேசி, அவர்களின் தேவைகளை புரிந்து கொண்டு பிரச்னைகளை தீர்த்துவிட்டு சாலையை போடுங்கள் என்று தான் சொன்னார்.  சட்டசபை குறிப்பை வேண்டுமானால் எடுத்துக் காட்டுகிறன்.

8 வழிச்சாலையை போடக்கூடாது என்று  எந்த காலத்திலும் திமுக சொல்லவே இல்லை என்று கூறியிருக்கிறார்.

அமைச்சரின் இந்த பேச்சை தான் இப்போது நெட்டிசன்கள் கழுவி, கழுவி ஊற்ற ஆரம்பித்து இருக்கின்றனர். திமுக ஐடி விங் சார்பில் அப்போது 8 வழிச்சாலைக்கு எதிரான திமுக வெளியிட்ட ஆவண படத்தை நெட்டிசன்கள் வெளியிட்டு உள்ளனர். அடிமை அதிமுக கூட்டம் என்று விமர்சித்துவிட்டு இப்போது 8 வழிச்சாலையை எதிர்க்கவில்லை என்றால் என்ன அர்த்தம் என்று கேள்வி கேட்க ஆரம்பித்துள்ளனர்.

இன்னும் பலர் அப்போது திமுக எடுத்த நடவடிக்கைகள், போராட்டங்களை வரிசைப்படுத்தி இணையத்தில் திமுகவை கொத்து பரோட்டவாக்கி வருகின்றனர்.

இதுக்கும் மேலாக 8 வழிச்சாலையை கைவிட கோரி திமுக எம்பிக்கள் ஸ்டாலின் ஆலோசனைப்படி மத்திய அமைச்சரிடம் வழங்கிய மனு தொடர்பாக முரசொலியில் வெளியான செய்தியை எடுத்து போட்டு இப்போ… என்ன செய்வீங்க? என்று கேள்வி எழுப்பி இருக்கின்றனர்.

அன்று ஒரு பேச்சு,இன்று ஒரு பேச்சு…திமுகவின் இரட்டை நிலையை மக்கள் மறக்க மாட்டார்கள் என்றும் சிலர் டுவிட்டரில் கருத்து கூறி உள்ளனர்.

Most Popular