மோடி மாதிரி மணி அடிக்கணுமா..? வெளுத்து வாங்கிய அமைச்சர்
சென்னை: பிரதமர் மோடியை மறைமுகமாக தமிழக அரசு விமர்சிக்க ஆரம்பித்து இருக்கிறது.
சென்னை மக்களை தவியாய் தவிக்க விட்டுள்ளது மிக்ஜாம் புயல். நகர் பகுதிகள் ஓரளவுக்கு இயல்புக்கு மாறினாலும், புறநகர் மற்றும் மக்கள் அடர்த்தி மிகுந்த பகுதிகளில் மக்கள் அரசாங்க உதவியை எதிர்பார்த்து காத்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு 6000 ரூபாய் இழப்பீட்டை தமிழக அரசு அதை உரியவர்களிடம் கொண்டு சேர்க்கும் வேளைகளில் ஜரூரராக களம் இறங்கி இருக்கிறது. ஆனால் வெள்ளம் மற்றும் அதன் சேதத்தை தடுக்க திமுக அரசு தவறிவிட்டதாக பாஜக ஒரு பக்கம் புலம்பி கொண்டிருக்கிறது.
இந் நிலையில் மிக்ஜாம் விவகாரத்தில் மத்திய அரசை ஆளும் திமுக அரசு நேரிடையாகவே எதிர்க்க ஆரம்பித்துவிட்டது எனலாம். மக்களிடம் எழுந்த அதிருப்தி, நிதி உதவியில் முரண்பாடு என விமர்சனங்களை அடுத்து இப்படிப்பட்ட எதிர்ப்பு எழுந்தது என்றே சொன்னாலும் அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது என்பது தமிழக அமைச்சர் ஒருவரின் பேட்டியில் தெரிகிறது.
அமைச்சர் தங்கம் தென்னரசு ஒரு கருத்தை வெளியிட்டு, மத்திய அரசுக்கு எதிரான தமிழக அரசின் அதிருப்தியை அதிரடியாக காட்டி உள்ளார். செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறி இருப்பதாவது:
புயல் பாதிப்பில் முதலமைச்சரே நேரிடையாக களத்திற்கு சென்றுள்ளார். அமைச்சர்கள், மீட்பு பணிகளில் உள்ளனர். அதிமுக ஆட்சியில் ஜெயலலிதா போட்டோ வைத்துக் கொண்டு நிவாரணம் தரப்பட்டது. தற்போது அப்படி இல்லை.
புயல் தாக்கத்துக்கு பின்னர் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சேலத்தில் இருந்தார். 6000 ரூபாய் நிவாரணம் அறிவித்து, அதற்கான டோக்கன் வரும்16ம் தேதி முதல் தரப்படும்.
டெல்லியில் உள்ள தலைவர்கள் போல் மணி அடிக்கல, தட்டை தட்டுல…இயற்கை பேரிடரை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதற்கு முன் உதாரணமா கொரோனா காலத்தில் திமுக அரசு இயங்கியது என்று கூறி உள்ளார்.