வருது வருது..! ஆரஞ்சு வருது… 2 நாள் கவனம்…!
சென்னை: மறுபடியும் தமிழக மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கும் வகையில் முக்கிய அறிவிப்பை சென்னை வானிலை மையம் வெளியிட்டு உள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை உண்டு இல்லை என்று போட்டு தாக்கி விட்டது. சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களை தண்ணி குடிக்க மழையால் மக்களின் அவதி சொல்லி மாளாது. வெள்ள நிவாரண பணிகளை தமிழக அரசு அதிவேகத்தில் எடுத்தாலும் குற்றச்சாட்டுகளும் அதே வேகத்தில் வந்து விழுந்தன.
இந் நிலையில் ஒரு முக்கிய அறிவிப்பை சென்னை வானிலை மையம் வெளியிட்டு இருக்கிறது. நாளை மற்றும் நாளை மறுநாள் மிக கனமழை பெய்யும் என்று தெரிவித்துள்ளது. 12 முதல் 20 செமீ வரை மழை பதிவாகும் என்று கூறியதால் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளது.
கன்னியாகுமரி, நெல்லை, ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும், புதுக்கோட்டை,சிவகங்கை மாவட்டங்களில் மிக கனமழை, நாகை,திருவாரூத், தஞ்சை, மதுரை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்யும் என்று கூறி இருக்கிறது.
சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்பது ஆறுதலான செய்தியாக இருக்கிறது. தென்மேற்கு வங்கக்கடல், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று வீசும், மீனவர்கள் குறிப்பிட்ட பகுதிகளுக்கு சென்று மீன்பிடிக்க வேண்டாம் என்றும் குறிப்பிட்டு உள்ளது.