Sunday, May 04 12:22 pm

Breaking News

Trending News :

no image

முத்தமிட்டு.. கட்டிப்புடிச்சாங்க…! சர்ச்சைக்கு விளக்கம் சொன்ன திமுக அமைச்சர்…!


சென்னை: மீனவர் இடுப்பில் பயணித்த அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் விளக்கம் வித்தியாசமாக இருப்பதாக பேச்சு எழுந்துள்ளது.

10 ஆண்டுகள் கழித்து அரியணை கிடைத்திருப்பதால் எந்த விமர்சனங்களுக்கும் ஆளாகாமல் ஆட்சிநகர வேண்டும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் நினைக்கிறார். இது கட்சியினருக்கும் தெரியும்.. ஆனாலும் அவர்கள் எதேச்சையாக செய்யும் காரியங்கள் வம்பில் சென்று முடிவது உண்டு.

அப்படித்தான் இப்போது முக்கிய அமைச்சரான அனிதா ராதாகிருஷ்ணன் சிக்கி இருக்கிறார். காலின் தண்ணீர் படக்கூடாது என்பதற்காக மீனவர் இடுப்பில் பயணித்த அவர் கடும் சர்ச்சையில் மாட்டி உள்ளார். திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காட்டில் உள்ளது உப்பங்கழி ஏரி.

இங்கு அடிக்கடி மண் அரிப்பு ஏற்படுவதாகவும், அதற்கு தீர்வு காண வேண்டும் என்றும் மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர். இது தொடர்பாக மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், கலெக்டர், அதிகாரிகள் உள்ளிட்டோர் அங்கு ஆய்வுக்கு சென்றிருக்கின்றனர்.

ஆய்வின் போது நடந்த சில விஷயங்கள், வீடியோவாக வெளியாகி கட்சி தலைமையை கோபத்துக்கு ஆளாக்கி இருக்கிறது. ஆய்வு நடத்த படகில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், இன்னபிற அதிகாரிகள் உள்ளிட்ட 30 பேர் படகில் பயணித்து உள்ளனர்.

அது 7 பேர் பயணிக்க வேண்டிய படகு… ஆனால் உள்ளே இருப்பதோ 30 பேர். பாரம் தாங்காமல் படகு ஊசலாட.. படகில் இருந்தவர் பலர் வேறு படகுக்கு மாற்றப்பட்டனர். முகத்துவாரம் பகுதியில் ஆய்வு முடிந்தது. அமைச்சர் சென்ற படகு கரை நோக்கி வந்தது… இங்கு தான் சர்ச்சையே ஆரம்பமானது.

கரைக்கு வந்த அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், தண்ணீரில் கால் வைக்க யோசித்து இருக்கிறார். அங்கிருக்கும் மீனவர் ஒருவர் அமைச்சரை தூக்கி இடுப்பில் வைக்க… கரை சென்று சேர்ந்திருக்கிறார் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்.

இந்த வீடியோ இப்போது அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை சிக்கலுக்கு உள்ளாக்கி உள்ளது. அமைச்சர் தண்ணீரில் கால் வைத்து நடக்க மாட்டாரா? ஏன் இப்படி நடந்து கொள்கிறார்கள் என்று கடுமையான விமர்சனங்கள் எழுந்தன.

அதற்கு அவர் அளித்த பதில்தான் இன்னும் வேடிக்கை. என்னை தூக்கிட்டு போகுமாறு யாரிடமும் சொல்லவில்லை. அன்பின் காரணமாக அவர்களே என்னை தூக்கி சென்றனர். அங்கு நடந்ததை மீனவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம். மீனவர்கள் என்னை கட்டிப்பிடித்தனர், முத்தமிட்டனர் என்று கூறி இருக்கிறார்.

அமைச்சராக இருக்கிறார், அவர் பேச்சை அனைவரும் கட்டாயமாக கேட்பர்.. தம்மை தூக்கி செல்ல வேண்டாம் என்று சொல்லி இருக்கலாமே ஏன்? அவர் கூறவில்லையா? ஒருவேளை அப்படி கூறியிருந்தால் அதை யாராவது மறுத்து பேசியிருப்பார்களா? என்ற கேள்விகளும், சந்தேகங்களும் எழுந்துள்ளன.

இது போதாது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அனிதா ராதாகிருஷ்ணனின் இடுப்பு பயணம் வீடியோவை டுவிட்டரில் வெளியிட்டு கமெண்ட் அடித்திருக்கிறார்.

அவர் கூறியது இதுதான்: பாவம் திமுக அமைச்சருக்கு தண்ணீரில் கண்டம்.. கடல்தாயின் அலைக்கரங்கள் காலில் தழுவுவதைக் கூட தாங்க முடியாத ஒருவரா? மீன்வளத்துறைக்கு அமைச்சர்.. வெட்கக் கேடு... என்று போட்டு தாக்கி இருக்கிறார்.

Most Popular