விஜய் சேதுபதி – மிஷ்கின்…! படம் பேரு இதுதான்
சென்னை: விஜய் சேதுபதியை இயக்கும் மிஷ்கின் தமது படத்தின் பெயர், பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டு உள்ளார்.
சினிமாவில் தனித்துவமான இயக்குராக இருப்பவர் மிஷ்கின். கால்களை மையப்படுத்தியே கேமரா கோணங்களையும், ஒரு காட்சியில் சொல்ல வருவதை அதற்கு அடுத்த காட்சியில் விளக்குவதும் அவரது ஸ்பெஷல்.
ஆங்கில, கொரிய படங்களை உல்டா செய்கிறார் என்ற பேச்சு இருந்தாலும் அவரது படத்துக்கு என்றே தனி ரசிகர் கூட்டம் இருக்கிறது. தற்போது அவர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதியை வைத்து படம் இயக்குகிறார்.
அந்த படத்துக்கு ட்ரெயின் என்று பெயர் வைக்கப்பட்டு உள்ளது. அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடப்பட்டு உள்ளது. பர்ஸ்ட் லுக் ரிலீசாகி பார்ப்போரை கவர்ந்துள்ளது.
முழுக்க, முழுக்க ஒரு ரயிலில் நடக்கும் சம்பவங்களை மையமாக கொண்டு கதை பின்னப்பட்டு உள்ளது. த்ரில்லர் வகையை சேர்ந்த இப்படத்தை பிரம்மாண்ட தயாரிப்பாளர் கலைப்புலி தாணு தயாரிக்கிறார்.
சமூக வலைதளங்களில் ட்ரெயின் பற்றிய அறிவிப்பு ஏக வரவேற்பை பெற்றிருக்கிறது.