Sunday, May 04 12:13 pm

Breaking News

Trending News :

no image

கொரோனா தடுப்பூசி போட்டுக்கிட்டா குழந்தை பிறக்காதா…? உண்மை என்ன..?


டெல்லி: கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டால் மலட்டுத்தன்மை ஏற்படுமா என்பதற்கான எந்த அறிவியல்பூர்வமான ஆதாரங்கள் இல்லை என்று மத்திய அரசு கூறி உள்ளது.

கொரோனாவுக்கான தடுப்பூசி இயக்கம் நாடு முழுவதும் வேகம் எடுத்து வருகிறது. ஒரு பக்கம் பல்வேறு மாநிலங்களில் தடுப்பூசி தட்டுப்பாடு இருந்தாலும், ஊசி போட்டுக் கொண்டால் ஏதாவது நடந்துவிடும் என்னும் மக்கள் இருந்து வருகின்றனர்.

கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டால் உயிர் போய்விடும், உடலில் பக்கவிளைவுகள் ஏற்படும் என்று தொடர்ந்து செய்திகள் வெளியாகி வருகின்றன. அதனால் மக்களில் ஒரு தரப்பினர் இன்னமும் குழப்பத்திலும், அச்சத்திலும் உள்ளனர்.

இது எல்லாத்தையும் விட கடந்த சில நாட்களாக கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வோருக்கு குழந்தை பிறக்காது, மலட்டு தன்மை ஏற்படும் என்று தகவல்கள் இஷ்டம் போல பரப்பப்பட்டு வருகின்றன. இதையடுத்து மத்திய சுகாதார அமைச்சகம் தெளிவான விளக்கம் ஒன்றை கொடுத்துள்ளது.

அதன் விவரம் வருமாறு: இப்போது மக்களுக்காக பயன்படுத்தப்படும் கொரோனா தடுப்பூசிகளினால் எந்த பாதிப்பும் ஏற்படாது. இந்த தடுப்பூசி போட்டுக் கொள்வதால் ஆண்களுக்கோ, பெண்களுக்கோ குழந்தை பெற்று கொள்வதில் எந்த பாதிப்பும் ஏற்படாது.

தடுப்பூசி போட்டுக் கொண்டால் ஆண்கள், பெண்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்பட்டு விடும் என்பதற்கு எந்த அறிவியல்ரீதியான ஆதாரங்களும் இல்லை. தடுப்பூசி மிகவும் பாதுகாப்பானது என்று கூறி உள்ளது.

மத்திய அரசு மிக தெளிவான விளக்கத்தை அளித்துள்ளதால், மக்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டால் குழந்தை பிறக்காதோ? மலட்டுத் தன்மை ஏற்பட்டு விடுமோ என்று யாரும் அஞ்சவேண்டாம்… ஆகையால் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொண்டு கொரோனா தொற்றுக்கு எதிரான போரில் பங்கெடுப்போம்…!

Most Popular