அதிர வைக்கும் தீவிரவாதிகளின் தற்கொலைப்படை தாக்குதல்…! 32 பேர் பலி…!
பாக்தாத்: ஈராக்கில் தீவிரவாதிகள் நடத்திய இரட்டை தற்கொலைப்படை தாக்குதலில் 32 பேர் கொல்லப்பட்டனர்.
அந்நாட்டின் தலைநகர் பாக்தாத்தின் மத்திய பாக்தாத்தில் உள்ள பாப் அல்-ஷர்கி மார்க்கெட் பகுதி இந்த தாக்குதல் சம்பவம் நடந்தது. தீவிரவாதிகள் நடத்திய இரட்டை தற்கொலைப்படை வெடிகுண்டு தாக்குதலில் 32 பேர் உடல் சிதறி பலியாகினர். 73 பேர் படுகாயமடைந்தனர்.
அவர்களில் பலரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக ராணுவம் தெரிவித்துள்ளது. தலைநகரில் உள்ள அனைத்து மருத்துவமனைகளும் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சையளிக்க வேண்டும் என்று அந்நாட்டு சுகாதார அமைச்சகம் உத்தரவிட்டு உள்ளது.
தாக்குதலுக்கு எந்த குழுவும் இதுவரை பொறுப்பேற்கவில்லை. தாக்குதல் சம்பவத்தை அடுத்து, அந்நாட்டில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.