கள்ளக்காதல் சர்ச்சை நடிகர் என்ட்ரியாகும் பிக்பாஸ் சீசன் 5…? வெடிக்கும் புது சர்ச்சை
சென்னை: கள்ளக்காதல் சர்ச்சையில் சிக்கிய பிரபல நடிகர், பிக்பாஸ் சீசன் 5ல் கலந்து கொள்ள உள்ளதாக செய்தி பரவி எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
கொரோனாவால் கடந்தாண்டு வெகு தாமதமாக தொடங்கியது பிக்பாஸ் 4 சீசன். இப்போது கொரோனா 2வது அலைக்கு இடையே பிக்பாஸ் சீசன் 5 செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்தில் தொடங்கப்படும் என்று தெரிகிறது.
5வது சீசனுக்கான பணிகள் ஒரு பக்கம் மின்னல் வேகத்தில் இருக்கும் அதே தருணத்தில் யார்? யார்? போட்டியாளர்கள் என ஒரு தகவல் உலாவி வருகிறது. உத்தேச போட்டியாளர்கள் யார் என்ற பட்டியலில் உள்ளவர்கள் சிலர், அதை மறுத்து இருந்தார்கள்.
இத்தனை சூழலுக்கு இடையே, 5வது சீசனில் பிரபல சீரியல் நடிகர் ஈஸ்வர் பங்கேற்க உள்ளார் என்று ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. இவர் கடந்த காலங்களில் கள்ளக்காதல் சர்ச்சையில் சிக்கி ஊடகங்களில் வெகு பிரபலமானவர்.
சில ஆண்டுகள் இருக்கும்…. ஈஸ்வர் மனைவி நடிகை ஜெயஸ்ரீ ஒரு புகார் அளித்திருந்தார். பிரபல சீரியல் நடிகை மகாலட்சுமியும், ஈஸ்வரும் கள்ள தொடர்பில் உள்ளனர் என்பது தான் அந்த புகாராகும். இந்த புகாரில் ஜாமீனில் ரிலீசான ஈஸ்வர், தமது மனைவி, மகாலட்சுமி கணவர் ஆகியோருக்கு தொடர்பு என்று கூறி பதில் குற்றச்சாட்டை முன்வைத்து பரபரப்பூட்டினார்.
அவரின் இந்த தினுசான குற்றச்சாட்டு அப்போது ஊடகங்களில் திகுதிகுவென வலம் வந்தது. மிக பெரிய சர்ச்சையான இந்த விஷயத்தில் சிக்கிய ஈஸ்வர் தான் பிக் பாஸ் 5 சீசனில் உள்ளே வருகிறார் என்று கூறப்படுகிறது. அதிகாரப்பூர்வ பட்டியல் வெளியாகும் வரை அவர், இவர் என்று தகவல்கள் பிக்பாஸ் முகாமில் இருந்து வெளியாகி கொண்டே தான் இருக்கும்து போல….!