Sunday, May 04 12:13 pm

Breaking News

Trending News :

no image

நடிகர் விஷாலால் ஓடிப்போன நடிகை யார்…? சொல்ல முடியுமா..?


சென்னை: நடிகர் விஷாலால் ஓடி போன நடிகை யார் என்பதை சொல்ல முடியுமா என்று நடிகை காயத்ரி ரகுராமுக்கு நடிகர் நந்தா கேள்வி எழுப்பி உள்ளார்.

பிஎஸ்பிபி பள்ளி விவகாரம் கல்வியாளர்கள் மத்தியில் மட்டுமல்லாது, சினிமாகாரர்களையம் கவலைப்பட வைத்துள்ளது. பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படும் ஆசிரியர் ராஜகோபாலன் கைது செய்யப்பட்டு விட்டாலும், அவரை பற்றிய குற்றச்சாட்டுகள் நின்றபாடில்லை.

திரைத்துறை ஒரு பக்கம் பிஎஸ்பிபி பள்ளியையும், அங்கு நடந்த சம்பவங்களையும் தாளித்து எடுத்து வருகின்றனர். குறிப்பாக பிரபல நடிகர் விஷால் எனது நண்பரும்,அமைச்சருமான அன்பில் மகேஷ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்து இருந்தார்.

விஷாலின் டுவிட்டை பார்த்து பொங்கிய பாஜக பிரமுகரும், நடிகையுமான காயத்ரி ரகுராம், பாலியல் கொடுமைகளுக்கு எதிராக விஷால் பேசுவதை கண்டித்தார். பெண்களை யூஸ் செய்துவிட்டு தூக்கி வீசும் விஷால் இதை பற்றி பேசவேண்டாம் என்று போட்டு தாக்கினார்.

காயத்ரியின் கருத்து ஒரு பக்கம் கோலிவுட்டில் தீயாய் பத்திக்கிட்டு எரிந்தது. இப்போது அவருக்கு பதிலடி தரும் விதமாக யார், யார் எல்லாம் பாதிக்கப்பட்டு உள்ளனர், எந்த நடிகை ஓடிப்போனார் என்று சொல்லுங்கள்?

நடிகையை விஷால் தொல்லைபடுத்தினார் என்பதற்கு ஆதாரம் இருக்கிறதா? யாராவது புகார் தந்துள்ளனரா என்று கேள்வி மேல் கேள்வி வைத்துள்ளார். அதற்கும் பதில் தந்துள்ள காயத்ரி, பாதிக்கப்பட்டவர்களின் நலன் கருதி நான் சொல்ல மாட்டேன் என்று கூறி இருக்கிறார்.

Most Popular