அண்ணாமலை ‘அசைன்மெண்ட்’… கலங்கி விழிக்கும் ‘கழகங்கள்’…!
சென்னை: தமிழகத்தில் கழகங்களை தடம் இல்லாமல் ஆக்கும் அசைன்மெண்ட் அண்ணாமலை கைகளில் வழங்கப்பட்டு உள்ளதாக ஒரு தகவல் தமிழகம் முழுக்க பரவி கிடக்கிறது.
யாரும் எதிர்பார்க்கவில்லை… தமிழக பாஜக தலைவர் ஆனார் எல் முருகன். மறுபடியும் யாரும் எதிர்பார்க்கவில்லை மத்திய அமைச்சர் ஆனார். தமிழக பாஜகவின் சீனியர்ஸ் கடும் அதிர்ச்சிக்கு ஆளாகினர். டெல்லி மேலிடத்திடம் பலரும் நகர்த்திய காய்கள் எல்லாம் பலனில்லாமல் போயின.
துணை தலைவரான அண்ணாமலை தலைவராக அறிவிக்கப்பட்டார். தமிழக பாஜக மட்டுமல்ல… மற்ற கட்சிகளுக்கும் லேசாக அதிர்ச்சிதான். அதற்கு காரணம் இல்லாமல் இல்லை. என்ன காரணத்துக்காக அவர் தமிழக பாஜக தலைவர் ஆனார்..? கட்சியில் சேர்ந்த கணக்கை வைத்து பார்த்தால் அவர் ரொம்பவும் ஜூனியர். ஆனால் பதவி அடிப்படையில் அண்ணாமலை தமிழக பாஜக தலைவர்.
அவருக்கு என்ன மாதிரியான அசைன்மெண்ட் தரப்பட்டது என்பது பற்றிய விவரங்கள் இப்போது மெல்ல், மெல்ல லீக்காகி இருக்கின்றன. தமிழகத்தில் முழுக்க, முழுக்க இனி திமுக எதிர்ப்பு என்பது முதல் பணி. கட்சியை தமிழகத்தில் முன்னேற்றி காட்ட வேண்டும். திமுகவுக்கு செக் மேல் செக் வைக்க வேண்டும் என்பது தான் முக்கிய அசைன்மெண்ட் என்று கூறப்படுகிறது.
அதற்காக சில குறிப்புகள், சில யோசனைகள் அவருக்கு அளிக்கப்பட்டு உள்ளதாம். முதலில் திமுகவுக்கு எதிரான இப்போது நிலுவையில் இருக்கும் வழக்கு விவகாரங்கள், அவர்கள் பற்றி எழுப்பப்படும் சர்ச்சைகள், மக்கள் எண்ண ஓட்டத்தில் திமுக மீதான விமர்சனங்கள் ஆகியவற்றை விலாவாரியாக பைல் பண்ணி அனுப்புமாறு டெல்லி மேலிடம் அறிவுறுத்தி உள்ளதாம்.
முதலில் திமுகவின் கோட்டைக்குள் ஓட்டையை போட்டுவிட வேண்டுமாம்… அதன்பின்னர் இலையான அதிமுக பக்கம் நகர வேண்டுமாம். அடுத்து வரக்கூடிய எம்பி தேர்தலுக்குள் அனைத்தும் சாத்தியமாகி விட வேண்டுமாம்.
திமுகவை ஆட்சி ரீதியாக தொந்தரவு செய்வது, அதிமுகவை இப்போது இருக்கும் நிலைமையை விட அடி மட்டத்துக்கு கொண்டு செல்வது என முக்கிய பணிகள் பக்காவாக பிளான் போட்டு தரப்பட்டு உள்ளதாம்.
நாட்கள் நகர, நகர.. அசைன்மெண்டின் அடுத்தடுத்த காட்சிகள் அரங்கேறுமாம். அதிமுகவுடன் இப்போது கூட்டணி என்றாலும் பாரபட்சம் வேண்டாம்… அசைன்மெண்ட்டே முக்கியம் என்பதே பிரதானமாக இருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டு உள்ளதாம்… ஆக மொத்தம் தமிழக அரசியலில் வெகு விரைவில் தமிழக பாஜக வட்டாரத்தில் இருந்து சர்ப்ரைசான நடவடிக்கைகள் வேகம் பெறத் தொடங்கும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன…!