Sunday, May 04 12:17 pm

Breaking News

Trending News :

no image

மாமா ஸ்டாலின்…! தயாநிதியை 'வம்பிழுத்த' அண்ணாமலை…!


சென்னை: கர்நாடகா செல்ல சொந்த விமானத்தை அனுப்பி வையுங்கள் என்று திமுக எம்பி தயாநிதி மாறனை சீண்டி உள்ளார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை.

தமிழகத்தில் இப்போது கொரோனாவுக்கு ஈடாக பெரும் பேசும் பொருளாகி இருப்பது மேகதாது அணை விவகாரம். காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடகா அணை கட்டுவதை தமிழக அரசு கடுமையாக எதிர்த்து வருகிறது.

அதிமுக, காங்கிரஸ், மதிமுக உள்ளிட்ட பல கட்சிகளும் கர்நாடகாவுக்கு கண்டனம் தெரிவித்து வருகிறது. இந்த விவகாரம் குறித்து திமுக எம்பி தயாநிதி மாறன் ஒரு கருத்து கூறியிருந்தார்.

அதாவது, தமிழக பாஜக போராடினாலும் மேகதாது அணை விவகாரத்தில் பிடிவாதமாக இருக்கும் கர்நாடகா அணையை கட்டியே தீருவோம் என்று  கர்நாடகா முதலமைச்சர் கூறி உள்ளார். எனவே அதை தடுக்க மாவீரன் அண்ணாமலையை தூதுவராக அனுப்புவோம் என்று தெரிவித்திருந்தார்.

தயாநிதியின் இந்த பேச்சு தமிழகத்தில் பல தளங்களில் கட்சி சார்பற்ற விவாதத்தை எழுப்பியது. இந் நிலையில் தயாநிதி மாறனின் இந்த பேச்சுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்.

இது குறித்து அவர் ஒரு டுவிட்டர் பதிவையும் வெளியிட்டு உள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது: தங்கள் சிறப்பு விமானத்தை அனுப்பி வைத்தால் நம் மாநில ஏழை விவசாயிகளை அழைத்துக்கொண்டு தூது செல்ல நான் தயார் இதை அவர் மாமா Thiru @mkstalin  அனுமதிப்பாரா? என்று போட்டு தாக்கி உள்ளார்.

தயாநிதி மாறனின் பேச்சுக்கு, அண்ணாமலை தக்க பதிலடி கொடுத்துள்ளார் என்று பாஜகவினரும், உரிய பதில் இல்லாததால் இப்படி பேசி பிரச்னையை திசை திருப்புகிறார் என்று திமுகவினரும் மாறி, மாறி பேசி வருகின்றனர்.

Most Popular