மனைவி புதைக்கப்பட்ட இடத்தில்… ஆ. ராசாவின் கோலம்…! வைரல் போட்டோ
சென்னை: மனைவி புதைக்கப்பட்ட இடத்தில் முன்னாள் அமைச்சர் ஆ. ராசா நின்றபடியே சோகமாக இருக்கும் போட்டோ இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.
திமுகவின் துணை பொது செயலாளர்களில் ஒருவர் ஆ ராசா. அவரது மனைவி பரமேஸ்வரி அண்மையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு காலமானார். 6 மாதங்களாக மார்பக புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த ரேலா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
எவ்வளவோ முயற்சித்தும் பரமேஸ்வரியை மருத்துவர்களால் காப்பாற்ற முடியவில்லை. ஒரு கட்டத்தில் அவர் காலமாகிவிட கட்சியினர் அதிர்ந்து போயினர்.
இந் நிலையில் அவரது மனைவி புதைக்கப்பட்ட இடத்தில் சோகமாக நின்று கொண்டு பார்த்திருக்கும் ஆ ராசா போட்டோ இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. மனைவி புதைக்கப்பட்ட இடத்தில் தன்னந்தனியாய் நின்று கொண்டு மனம் வேதனைப்படும் அவரை காணும் கட்சியினர் கலங்கி போயினர்.