#JN1Variant அடுத்த ஆபத்து…! ஒரே நாள்.. 3 பேரை காவு வாங்கிய கொரோனா
அடுத்த இன்னிங்ஸ் போல புதிய வகை கொரோனா தொற்று 3 பேரை பலி வாங்கி உள்ளது.
உலக நாடுகளில் பரவி பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தியது கொரோனா வைரஸ். தற்போது இதன் தாக்கம் கட்டுப்படுத்தப்பட்டாலும் புதிது, புதிதாக தொற்றுகள் பதிவாகி வருகின்றன.
அந்த வகையில் இப்போது இந்தியாவில் புது கொரோனா தொற்று உருவாகி பரவி வருகிறது. இதன் தாக்கத்தால் 3 பேர் உயிரிழந்து இருக்கின்றனர். குறிப்பாக கேரளாவில் இந்த தொற்றின் தாக்கம் அதிகரிதுள்ளதாக தெரிகிறது.
வெகு வேகமாக இந்த தொற்று பரவி வருவதாக கூறப்பட்டுள்ளதால் மக்கள் சுகாதார நடவடிக்கைகளை மேற்கொள்வது கட்டாயம் என்ற நிலை உருவாகி இருக்கிறது.
அம்மாநிலத்தில் மட்டும் நேற்று 292 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. தற்போது வரை 2041 என்ற எண்ணிக்கையில் ஒட்டு மொத்தமாக கொரோனாவின் பாதிப்பு பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.
தொடர்ந்து உயர்ந்து வரும் கொரோனாவின் தொற்று, மக்கள் மத்தியில் ஒருவித கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே அனைவரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு பின்பற்ற வேண்டும் என்ற அவசியமும் தற்போது எழுந்துள்ளது.