பெட்ரோல், டீசல் விலை…! நம்ப முடியாத அதிசயம் நடக்க போகுதாம்…?
டெல்லி: பெட்ரோல், டீசல் விலை நம்ப முடியாத அளவுக்கு குறைய இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
நாடு முழுவதும் இப்போது பெட்ரோல், டீசல் விலை நினைத்து பார்க்க முடியாத விலையில் இருக்கிறது. பெட்ரோல் ஒரு லிட்டர் 102.49 ரூபாய்க்கும், டீசல் ஒரு லிட்டர் 94.39 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. 4 நாட்களாக இதே விலை நிலவரம் நீடித்து வருகிறது.
ஆனால் இப்போது இந்த விலையில் அதிரடி மாற்றம் இருக்கும் என்று பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இது எப்படி சாத்தியம் என்பதையும் அவர்கள் சில புள்ளி விவரங்களுடன் விவரிக்கின்றனர்.
அதாவது… தற்சமயம் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை முன் எப்போதும் இல்லாத வகையில் சரிந்துள்ளது. கிட்டத்தட்ட 7 சதவீதம் குறைந்து உள்ளது. 77 டாலர் என்பதில் இருந்து 68 டாலராக குறைந்திருக்கிறது.
மேலும் எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளிள் அமைப்பான ஓபெக் மற்றும் ஓபெக் பிளஸ் நாடுகளுக்கு இடையில் உற்பத்தி பெருக்கத்துக்கு போடப்பட்ட ஒப்பந்தமும் ஒரு காரணம் என்று தெரிய வந்துள்ளது.
இந்தியாவில் எண்ணெய் விலையானது சர்வதேச சந்தையில் உள்ள விலையின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது. அதில் ஏற்படும் ஏற்ற, இறக்கங்கள் இந்தியாவில் உள்ள நுகர்வோரை கடுமையாக பாதிக்கிறது. இப்போது 10 மாதங்களில் இல்லாத அளவுக்கு கச்சா எண்ணெய் விலை சர்வதேச அளவில் சரிந்துள்ளது.
அதன் தாக்கம் இந்திய சந்தைகளில் எதிரொலிக்கும் என்று பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர். குறிப்பாக பெட்ரோல் ஒரு லிட்டர் விலை 4 ரூபாய் வரையும், டீசல் ஒரு லிட்டர் 5 ரூபாய் வரையும் அதிரடியாக குறையும் என்று தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. ஆனால் அது எந்தளவுக்கு சாத்தியப்படும் என்பது தெரியவில்லை.