Sunday, May 04 11:49 am

Breaking News

Trending News :

no image

திமுகவில் மகேந்திரனுக்கு கிடைத்தது ‘சூப்பர்’ பதவி…! ஆச்சரியம் தந்த ஸ்டாலின்


சென்னை: மநீமவில் இருந்து திமுகவில் இணைந்த டாக்டர் மகேந்திரனுக்கு திமுகவின் தகவல் தொழில்நுட்ப அணி இணை செயலாளர் பதவி வழங்கப்பட்டு உள்ளது.

மக்கள் நீதி மய்யத்தின் துணை தலைவராக இருந்தவர் டாக்டர் மகேந்திரன். மக்களவை தேர்தலில் எதிர்கட்சிகளுக்கு டப் பைட் கொடுத்து லட்சக்கணக்கான வாக்குகளை பெற்று அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தார்.

ஆனால் சட்டசபை தேர்தல் அவருக்கு கை கொடுக்கவில்லை. சிங்காநல்லூர் தொகுதியில் போட்டியிட்டு தோற்றார். அவர் மட்டுமல்ல…. கட்சியின் தலைவர் கமல்ஹாசன் உள்ளிட்ட அனைவரும் தோற்று போயினர்.

தேர்தல் தோல்வி அக்கட்சிக்குள் பூகம்பமாக வெடிக்க, மக்கள் நீதி மய்யத்துக்கு கும்பிடு போட்டுவிட்டு கிளம்பினார். அவர் விலகிய மறுநாளே கட்சியை விட்டு நீக்கியதாக அறிக்கை வெளியிட்டு பரபரப்பை கிளப்பினார்.

மநீமவில் இருந்து வெளியேறிய பிறகு எந்த கட்சியில் இணைவார் என்று பேசப்பட்டது. பாஜக அல்லது அதிமுக என்று தகவல்கள் வெளியான நிலையில், நேராக ஆதரவாளர்களுடன் அறிவாலயத்தில் நுழைந்து திமுகவில் ஐக்கியமானார்.

மகேந்திரன் கட்சியில் இணைந்த போதே அவருக்கு சில முக்கியமான அசைன்மெண்டுகள் கொடுக்கப்பட்டதாக அப்போதே பேச்சுகள் எழுந்தன. உள்ளாட்சி தேர்தலை மனதில் கொண்டும், கொங்கு மண்டலத்தில் திமுகவை கரையேற்றும் நடவடிக்கைகள் தொடங்கிவிட்டதாக பேசப்பட்டது.

இந் நிலையில் மகேந்திரனுக்கு திமுகவின் தகவல் தொழில்நுட்ப அணி இணை செயலாளர் பதவி வழங்கப்பட்டு உள்ளது. இது குறித்து நீர்வளத்துறை அமைச்சரும், திமுகவின் பொதுச்செயலாளருமான துரைமுருகன் இன்று  வெளியிட்டுள்ள அறிவிப்பில், கூறப்பட்டு உள்ளதாவது:

கட்சியின் சட்டத் திட்ட விதி: 31- பிரிவு: 19- ன் படி திமுகவின் தகவல் தொழில்நுட்ப அணியின் இணைச் செயலாளராக டாக்டர் மகேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Most Popular