Sunday, May 04 12:06 pm

Breaking News

Trending News :

no image

சென்னைக்கு ஆபத்தா…? 100 கிமீ வேகத்தில் வீசப்போகும் சூறாவளி…! மக்கள் பீதி


சென்னை: நிவர் புயல் கரையை கடக்கும்போது, சென்னையில், 100 கிமீ வேகத்துக்கு, சூறாவளி காற்று வீசும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

இது குறித்து புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ள சென்னை வானிலை மையம், நிவர் கரையை கடக்கும்போது, நாகை, காரைக்கால், கடலுார், திருவாரூர் மாவட்டங்களில், மணிக்கு, 130 கி.மீ., வேகத்தில் காற்று வீசும். அதிகபட்சம், 145 கி.மீ., வேகத்திலும் கூட சூறாவளி வீசக்கூடும் என்று தெரிவித்து உள்ளது.

அதே நேரத்தில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில், மணிக்கு 90 முதல் 100 கிமீ வேகம் வரை சூறாவளி காற்று வீசும். சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில், இன்றும் மிக கன மழை தொடரும்.

சென்னையில் 2 நாட்களாக மழை கொட்டி வருகிறது. குறிப்பாக, நுங்கம் பாக்கத்தில், 10 சென்டி மீட்டரும், விமான நிலையத்தில், 7 சென்டி மீட்டரும் மழை பெய்துள்ளது.

Most Popular