Sunday, May 04 12:01 pm

Breaking News

Trending News :

no image

பிரபல இயக்குநர் மறைவுக்கு கமலின் வெற்றிவிழா அஞ்சலி…!


சென்னை: இயக்குநர் பிரதாப் போத்தன் மறைவுக்கு நடிகர் கமல்ஹாசன் உள்ளிட்ட பல்வேறு திரையுலக நட்சத்திரங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

திரைப்பட இயக்குநர் கீழ்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் உடல்நலக்குறைவால் காலமனார். அவருக்கு வயது 70. அவரின் மறைவை அறிந்த திரையுலகத்தினர் அஞ்சலி தெரிவித்து வருகின்றனர். நடிகர் கமல்ஹாசன், கருணாஸ், மணிரத்னம், பிசி ஸ்ரீராம் உள்ளிட்ட பலர் நேரில் சென்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

இந் நிலையில் நடிகர் கமல்ஹாசன் பிரதாப் போத்தன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தமது டுவிட்டர் பதிவில் கூறி உள்ளதாவது:

தீவிர இலக்கிய வாசிப்பையும் கலைப் படங்கள் மீதான தணியாத ஆர்வத்தையும் தொடர்ந்தவர் நண்பர் ப்ரதாப் போத்தன். விறுவிறுப்பான திரைப்படங்களை வெற்றிகரமாக இயக்குவதிலும் நிபுணர் என்பதை 'வெற்றிவிழா' காலத்தில் பார்த்திருக்கிறேன். அவருக்கென் அஞ்சலி என்று குறிப்பிட்டு உள்ளார்.

Most Popular