சசிகலா விடுதலை…? அதிகாரப்பூர்வ அறிவிப்பு..? அதிமுக பேரதிர்ச்சி…!
சென்னை: பெங்களூரு சிறையில் உள்ள சசிகலா இந்த மாத இறுதியில் விடுதலையாகிறார் என்று அவரது வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் அறிவித்துள்ளார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் உள்ளார் சசிகலா. கடந்த மார்ச் மாதமே அவர் விடுதலையாவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
அதன் பிறகு பாஜகவின் முக்கிய பிரமுகரான ஆசிர்வாதம் ஆச்சாரி என்பவர் ஆகஸ்டு மாதம் சசிகலா விடுதலைவார் என்று டுவிட் போட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை.
இப்போது புதிய திருப்பமாக, சசிகலா இந்த மாத இறுதியில் விடுதலையாகிறார் என்று அவரது வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் அறிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த அவர் இந்த தகவலை வெளியிட்டு உள்ளார்.
அவர் மேலும் கூறியதாவது: இந்த மாத இறுதியில் அல்லது அக்டோபர் முதல் வாரத்தில் சசிகலா சிறையில் இருந்து நிச்சயமாக வெளியே வருவார். நன்னடத்தை விதிகளின் படி மார்ச் மாதமே அவர் விடுதலைக்கான தகுதியை பெற்றுவிட்டார்.
கொரோனா பரவல், லாக்டவுன் காரணமாக விடுதலை தள்ளி போனது. 300 கோடி ரூபாய் சொத்து முடக்கம் குறித்து உரிய தருணத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்போம் என்று கூறினார். சசிகலா விடுதலை எப்போது என்பது பற்றிய தகவல் அதிமுகவின் மேல்மட்டத்துக்கும் சென்றிருக்கிறது.
அதையறிந்த பல தலைவர்கள் பேரதிர்ச்சியில் உள்ளார்களாம். அவர் கட்சியின் உறுப்பினரே அல்ல என்று பஞ்ச் வசனம் பேசிய முக்கிய அமைச்சர்களும் என்ன செய்யலாம் என்று யோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.