‘தங்கமகன்’ ஸ்டாலின்…! சூப்பர்… இதுதான் ஒலிம்பியாட் ஸ்பெஷல்..!
‘தங்கமகன்’ ஸ்டாலின்…! சூப்பர்… இதுதான் ஒலிம்பியாட் ஸ்பெஷல்..!
சென்னை: ஒலிம்பியாட் தொடக்க விழாவில் வழக்கமான உடையில் இல்லாமல் பட்டு வேட்டி சட்டையில் கலக்கலாக வந்திருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.
எங்கே போனாலும்.. எந்த நிகழ்ச்சி என்றாலும் வேட்டி சட்டை தான். வெளிநாட்டு நிகழ்வு, வெளிநாட்டு சுற்றுப்பயணம் என்றால் கோட் சூட். இது தான் முதல்வர் ஸ்டாலினின் ஆடை ஸ்டைல்.
ஆனால் சென்னையில் இன்று தொடங்கிய ஒலிம்பியாட் போட்டியை உலக நாடுகளை உன்னிப்பாக கவனித்து வருகின்றன. கண்கவர் நிகழ்ச்சிகள், கலக்கல் நடனங்கள் என தொடக்க விழா சக்கை போடு போடுகிறது.
187 நாடுகளின் வீரர்கள் கலந்து கொண்டுள்ள இந்த தொடர் தொடக்க விழாவில் கலக்கலான காஸ்ட்யூமில் வந்து கலக்கி இருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். நேரு உள் விளையாட்டு அரங்கில் கலக்கலான நிகழ்ச்சிகளுடன் பார்ப்போருக்கு தனி விருந்து படைக்கும் அளவுக்கு இருக்கிறது தொடக்க விழா.
விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகளுடன் வந்திருக்கிறார். நடிகர் கார்த்தி, கவிஞர் வைரமுத்து, ஸ்டாலின் மனைவி துர்கா, உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் வந்துள்ளனர்.
யார் எப்படி வந்தாலும் என்னங்க… எங்க முதலமைச்சரை பாருங்க என்று உற்சாகத்தில் இருக்கின்றனர் உடன்பிறப்புகள். வழக்கமான தமது காஸ்ட்யூமில் இருந்து முற்றிலும் மாறுபட்டு உள்ளார் முதல்வர் ஸ்டாலின்.
பட்டு வேட்டி, பட்டு சட்டை, அங்கவஸ்திரம் என தங்கமகனாய் ஜொலிக்கிறார் என்று திமுகவினர் உற்சாக மிகுதியில் வலம் வருகின்றனர். இணையத்திலும் அவர் பட்டு வேட்டி சட்டையுடன் காட்சி தரும் போட்டோக்களை கட்சியினர் பகிர்ந்து மகிழ்ந்து வருகின்றனர்.