பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு: பால் ஆர்.மில்க்ரோம், ராபர்ட் பி.வில்சன் ஆகியோர் தேர்வு
ஸ்டாக்ஹோம்: 2020ம் ஆண்டு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பால் ஆர்.மில்க்ரோம், ராபர்ட் பி.வில்சன் ஆகிய இருவருக்கு பகிர்ந்து அளிக்கப்படுகிறது.
கடந்த வாரம் முதல் துறைரீதியான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இன்று பொருளாதாரத்துக்கு நோபல் பரிசு யாருக்கு என்று அறிவிக்கப்பட்டது.
அதன்படி, ஏல முறைகள் குறித்த ஆராய்ச்சிக்காக ஆய்வாளர்கள் பால் ஆர்.மில்க்ரோம், ராபர்ட் பி.வில்சன் ஆகிய இருவருக்கும் நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
இருவரும் ஏலக் கோட்பாட்டை மேம்படுத்தி புதிய ஏல வடிவங்களை கண்டுபிடித்துள்ளனர். அவர்களின் கண்டுபிடிப்புகள் உலகம் முழுவதும் உள்ள விற்பனையாளர்கள், வணிகர்கள் மற்றும் வரி செலுத்துவோருக்கு பயன்படும்.