Sunday, May 04 11:58 am

Breaking News

Trending News :

no image

மாற்றப்படுகிறாரா…. தமிழக ஆளுநர்…? மத்திய அரசின் கையில் புதிய பட்டியல்


டெல்லி: தமிழக ஆளுநர் பன்வாரி லால் புரோகித் மாற்றம் வெகு விரைவில் நிகழும் என்று ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது.

2017ம் ஆண்டு செப்டம்பரில் தமிழக ஆளுநராக நியமிக்கப்பட்டார் பன்வாரிலால் புரோகித். ஆளுநரான தொடக்கத்தில் தமிழக அரசின் செயல்பாடுகள் பற்றி கவலை கொண்ட அப்போது ஆட்சியில் இருந்த் அதிமுக அரசுக்கு இணையாக ஆய்வு பணிகளை நடத்தினார்.

அவரது அதிரடி நடவடிக்கைகளுக்கு வரவேற்பு இருந்த அதே தருணத்தில் கடும் எதிர்ப்புகளும் எழுந்தன. ஆனால் இப்போது தமிழகத்தில் திமுக மலர்ந்திருக்கிறது. ஆகையால் மாநில ஆளுநர் மாற்றப்படலாம் என்று பேச்சு சில வாரங்களுக்கு முன்னதாக எழுந்து வந்தது.

அண்மையில் மத்திய அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டது. பல அமைச்சர்கள் நீக்கப்பட்டு, புதிய அமைச்சர்கள் பொறுப்பேற்றனர். அதே நேரத்தில் சூட்டோடு, சூடாக மாநில ஆளுநர்கள் மாற்றம் நிகழ்ந்தது. மொத்தம் 8 மாநிலங்களின் ஆளுநரர்கள் அதிரடியாக மாற்றப்பட்டனர்.

அப்போதே தமிழகம் ஆளுநர் மாற்றப்படலாம் என்று தகவல்கள் பரவின. ஆனால் ஆளுநர் மாற்றம் என்ற பட்டியலில் பன்வாரிலால் புரோகித் பெயர் இடம்பெறவில்லை. ஆனால் இப்போது ஆளுநர் மாற்றம் 2வது பட்டியல் டெல்லியில் தயாராகி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

புதுச்சேரிக்கு முழு நேர துணை நிலை ஆளுநர் நியமிக்கப்படுவார் என்றும், அதோடு தமிழக ஆளுநர் மாற்றப்படுகிறார் என்றும் ஒரு தகவல் பரவி கிடக்கிறது. ஒரு வேளை மாற்றப்பட்டால் யார் புதிய ஆளுநர் என்ற பெயர்களை மத்திய அரசு டிக் செய்து வைத்திருப்பதாக கூறப்படுகிறது.

தமிழகத்தின் புதிய ஆளுநராக முன்னாள் மத்திய அமைச்சர்கள் ரவிசங்கர் பிரசாத், பிரேந்திரசிங் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் பெயர் பட்டியலில் அடிபடுவதாக தெரிகிறது.  நாளை பிரதமர் மோடியை தமிழக ஆளுநர் பன்வாரிலால் சந்திக்க இருப்பதாக கூறப்படும் நிலையில் ஆளுநர் மாற்றம் என்கிற இந்த தகவலும் கசிந்துள்ளது, குறிப்பிடத்தக்கது.

Most Popular