கொரோனாவுக்கு மத்தியில் கூடுகிறது நாடாளுமன்றம்…! எப்போது தெரியுமா..?
டெல்லி: கொரோனா ஒரு பக்கம் மிரட்ட, நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
சீன இறக்குமதியான கொரோனா வைரஸ் இப்போது இந்தியாவை உண்டு, இல்லை என்று ஆக்கி வருகிறது. உலகில் முதலில் கண்டறியப்பட்ட சீனாவில் பாதிப்பு குறைவாக இருக்க நோயாளிகளின் எண்ணிக்கை இந்தியாவில் பல லட்சங்களை தாண்டிவிட்டது.
இப்படி கொரோனா தாக்கம் ஒரு பக்கம் இருந்தாலும், வரும் 14 ம் தேதி முதல் அக்டோபர் 1 வரையில் நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இரு அவைகளிலும் எம்பிக்கள் சமூக இடைவெளியுடன் அமர ஏற்பாடுகள் நடக்கின்றன.
நாடாளுமன்றம் விடுமுறை இன்றி நடக்கும், மொத்தம் 18 அமர்வுகள் இருக்கும், அதன் தேதிகள் பிறகு அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக கொரோனாவால் மார்ச் 23 ம் தேதி இரு அவைகளின் நாட்கள் குறைக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.